ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கேட்டரிங் பண்ணா CWC 5-க்கு ஜட்ஜா ஆகிடுவீங்களா.! மாதம்பட்டி ரங்கராஜனை லேசா நினைச்சிடாதீங்க! இப்படி ஒரு வரலாறா?

Madhampatti Rangaraj: மக்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. குக் யாரு, கோமாளி யாரு என்பதை தாண்டி இப்போ அந்த நிகழ்ச்சியின் நடுவர் ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் அதிக கவனத்தை ஈர்த்துவிட்டார்.

யாருடா இந்த ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் என்று எல்லாரும் தேடி கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஃப் வெங்கடேஷ் பட்டின் ரசிகர்களுக்கு தான் ரொம்ப வருத்தம். ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் உள்ள வந்ததால தான் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு போய்ட்டாருனு கூட பீதியை கிளப்புறாங்க.

வெங்கடேஷ் பட்டை எல்லாருக்கும் தான் பிடிக்கும். அதுக்குன்னு ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் CWC 5-க்கு நடுவர் ஆனது தப்புனு மட்டும் யாரும் முடிவு எடுத்துடாதீங்க. உண்மையிலேயே ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் அந்த நிகழ்ச்சிக்கு நடுவர் ஆவதற்கு 100 சதவீதம் தகுதி உள்ளவருனு இந்த செய்தியை படிச்சு முடிக்கும் போது தெரியும்.

கோயம்புத்தூரில் உள்ள மாதம்பட்டி கிராமத்தில் சமையல்காரர் ஆக இருந்தவர் தான் தங்கவேலு. என்ன தான் சமையல் தொழிலில் கை நிறைய காசு பார்த்தாலும் தன்னை எல்லோரும் சமையல்காரன் என்று சொல்லி ஒதுக்குவது அவருக்கு கஷ்டமாக இருந்தது.

இதனால் தன்னுடைய மகன் ரங்கராஜனை இந்த தொழில் பக்கமே வரக்கூடாது, பெரிய வேலையில் இருக்கணும் என்று படிக்க வைத்திருக்கிறார். ரங்கராஜூம் இளங்கலையில் கணினி தொழில்நுட்பம் படித்துவிட்டு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜனை லேசா நினைச்சிடாதீங்க!

வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் இவருடைய கனவாக இருந்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அப்பா, அவருடைய தொழிலை பார்ப்பதற்காக ரங்கராஜனை அழைத்திருக்கிறார். அப்பா சொன்னதும் வந்து கல்யாண வீட்ல, சாம்பார் கூட்டு அப்பளம்னு செஞ்சிரலாம் என்னும் ஆசை எல்லாம் ரங்கராஜனுக்கு கிடையாது.

அந்த தொழிலை கையில் எடுப்பதற்கு முன் டிப்ளமோ வில் கேட்டரிங் படித்திருக்கிறார். சமையல் கத்துக்கிட்டா மட்டும் போதாதுன்னு தொழிலை நிர்வகிப்பதற்காக எம் பி ஏ படிப்பையும் படித்திருக்கிறார். சமையல் தொழில் உச்சபட்ச அளவில் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார்.

அதாவது, எந்த வகையான உணவு கேட்கப்பட்டாலும் அதை சமைத்துக் கொடுக்க வேண்டும் என முதலில் திட்டமிட்டு இருக்கிறார். தொழிலில் முன்னேற வேண்டும் என்றால் தொழிலாளிகளை மனம் குளிர வைக்க வேண்டும் என்பதும் ஒரு ட்ரிக்ஸ் தான்.

வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை வெட்டுவதற்கு கூட மெஷின்களை இறக்குமதி செய்து இருக்கிறார். அதேபோன்று சமையல் வேலை செய்யும் இடங்களில் முழுக்க ஏசி பொருத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு மெனுவை பார்த்து அந்த டிஷ்சை ரங்கராஜ் செய்வது கிடையாது.

உதாரணத்திற்கு கேரளாவில் ஒரு பரோட்டா நன்றாக இருக்கிறது என்றால், அந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் அதை கற்றுக் கொண்டு விட்டு வருவது, இல்லை என்றால் அந்த கேரளா மாஸ்டரை திருமண வீட்டிற்கு கூப்பிடுவது என சமையலில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

இதுதான் அவரை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அதை மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் சமையல் செய்பவர்களின் தரப்பிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு நல்ல உபசரிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.

சாப்பிட்டு விட்டு கை கழுவ வரும் இடங்களில் கூட டிஷ்யூ பேப்பர் எடுத்துக் கொடுப்பதற்கு ஒரு ஆள் என மன திருப்தி அடைய வைத்திருக்கிறார். அதே போன்று ஒரு நாளில் நான்கு கல்யாண ஆர்டர்கள் தான் இவர் எடுத்து நடத்துவது.

ஒரு வீட்டில் இவர், இன்னொரு கல்யாண வீட்டில் அவருடைய தம்பி, இன்னொரு கல்யாண வீட்டில் இவருடைய அப்பா, மற்றொரு கல்யாண வீட்டில் இவருடைய சகோதரி என நேரில் சென்று உபசரிப்புகளை கொடுத்து வருகிறார்கள்.

இப்போதைக்கு பெரிய வீட்டு ஆட்களின் திருமணங்கள் என்றாலே அங்கு மாதம் பட்டி ரங்கராஜ் சமையல் தான். அது மட்டும் இல்லாமல் கூகுள் அலுவலகம் இருக்கும் இடத்தில் சைவ மற்றும் அசைவ ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

தான் பிரபலம் அடைந்தால் தான் தன்னுடைய தொழில் பிரபலம் அடையும் என்பதால் சினிமாவிலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் எனும் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார். அது மட்டும் இல்லாமல் ஒன்று இரண்டு படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பாவின் தொழிலை எடுத்து நடத்துவது என்பதை தாண்டி, சமையல் தொழிலை கௌரவம் ஆனதாக மாற்றிய பெருமை மாதம்பட்டி ரங்கராஜுக்கு சேரும். இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் டாலர் இருக்கும்.

கண்டிப்பா இவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் பொழுது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கு இவர் நடுவராக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்பது புரியும்.

- Advertisement -

Trending News