புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சரவெடியாய் வரப் போகும் அயலான் பட அப்டேட்.. சம்பவம் செய்ய தயாராகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் படுமோசமான தோல்வி அடைந்தது. நிலையில் அடுத்ததாக மாபெரும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருகிறார்.

இந்நிலையில் பல வருடங்களாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Also Read : அட இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா? நடிப்பையும் தாண்டி எஸ்கே கொடுத்த 7 ஹிட் பாடல்கள்

அயலான் படம் ஏலியன்ஸ் கதையை கொண்டுள்ளதாக முன்பே தகவல் வெளியானது. மேலும் இப்படத்திற்காக பல தொழில்நுட்பத்தைக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவதார் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பார்கள் இந்த படத்திலும் வேலை செய்துள்ளனராம்.

இந்நிலையில் நாளை தினம் சரவெடியாய் அயலான் படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. அதாவது நாளை காலை 11.04 மணிக்கு அயலான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் இது மிகப் பெரிய அறிவிப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read : பலி கெடாவாக மாறிய சிவகார்த்திகேயன்.. சுயநலமாக மாவீரனுக்கு ஆப்பு வைத்த ரெட் ஜெயண்ட்

ஆகையால் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் இப்படம் எப்போது வெளியாகும் என சில மாதங்களாகவே ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். எனவே அயலான் படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட் உள்ளது.

ayalaan-sivakarthikeyan

Also Read : சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

Trending News