வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த வாரிசு நடிகர்.. துணிவுக்கு நோ சொன்னதன் பின்னணி

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கும் அஜித் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைத்திருக்கிறார். அதனாலேயே இந்த திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் துணிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்தவர் தான் நடிகர் ஷாம்.

Also read: கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

இடையில் சில காலம் காணாமல் போயிருந்த இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் இவருக்கு துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. துணிவு படத்தில் வில்லனாக நடித்தவர் தான் ஜான் கோக்கன். படத்தில் இவருடைய வில்லத்தனம் இப்போது பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தது ஷாம் தான்.

அவரிடம் தான் முதலில் இது குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால் வாரிசு திரைப்படத்தில் அவர் நடிக்க டேட் கொடுத்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் சொல்லி வைத்தார் போல் இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தேதியை தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே வாரிசுக்கு தேதி கொடுத்து விட்டதால் ஷாம் இந்த படத்தை வருத்தத்துடன் நிராகரித்திருக்கிறார்.

Also read: துணிவு பட வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம்.. வினோத்துக்கு முதுகெலும்பாக இருந்த மேதை

இந்த விஷயத்தை அவரே தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித் மற்றும் ஷாம் இருவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் தான் படித்து வருகின்றனர். அப்போது இவர் அடிக்கடி பள்ளியில் அஜித்தை சந்தித்து பேசுவாராம். அந்த நட்பின் அடிப்படையிலேயே இவருக்கு துணிவு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவரால் அதை ஏற்க முடியவில்லை.

இப்போது துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஷாம் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று நிச்சயம் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். இருந்தாலும் இவருக்கு இப்போது அடுத்த அடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் அஜித்துடன் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: வாரிசு படத்தில் நண்பர் அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஜய்.. இந்த மாதிரி ட்விஸ்ட்டை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

Trending News