வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எப்போதுமே விஜய் படத்தின் ஆடியோ பங்ஷன் பிரம்மாண்டமாக நடைபெறும். அதில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் வைக்க முடியாமல் போனது. ஆகையால் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு சன் டிவிக்கு விஜய் பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் வாரிசு படத்திற்கு ஆடியோ பங்க்ஷன் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாவதால் விஜய் படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆகையால் துணிவு படத்தை துணிந்து அடிக்க வருகின்ற 24ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ ஃபங்ஷன் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை சமீபத்தில் இளையராஜாவின் விழாவை நடத்திய டீம் தான் முழுப் பொறுப்பு ஏற்று நடத்தி வருகிறது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு செலவை பற்றி கவலை வேண்டாம் எவ்வளவு பிரம்மாண்டம் வேண்டுமோ அப்படி நடக்க வேண்டும் என அந்த டீமுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
Also Read : வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்
இப்போது அவர்கள் இந்தப் பணியில் முழுவீச்சாக செயல்பட்ட வருகிறார்கள். இதுவரை அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு 5 கோடி வரை செலவாகி உள்ளதாம். மேலும் இன்னும் இரண்டு மூன்று கோடிகள் செலவு செய்யவும் தில் ராஜு தயாராக இருக்கிறாராம்.
மேலும் இவ்வளவு பிரமாண்டமாக நடக்கும் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் பாடல் மட்டும் வெளியிடாமல் ட்ரைலரையும் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் டிசம்பர் 24 காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Also Read : ஒரே நடிகருக்காக அடித்துக்கொண்ட H.வினோத், வம்சி.. கடைசியில் தட்டி தூக்கிய வாரிசு