திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைவா போல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு.. முடிஞ்சா ரிலீஸ் பண்ணி பாரு என சவால்

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது வாரிசு படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏஎல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் ரிலீசுக்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது.

அரசியல் வசனங்கள் கொண்ட படமாக இப்படம் சித்தரிக்கப்பட்டதாக தலைவா படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல்கள் வெளியானது. இப்போது அதே நிலைமை வாரிசு படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார்.

Also Read : மகேஷ் பாபுவின் இந்த பட காப்பி தான் விஜய்யின் வாரிசு.. ஆதாரத்துடன் வெளியான புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை

இதனால் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடம் பேசி உள்ளார். ஆனால் அவர்கள் நேரடியாக லலித்திடமிருந்து படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது.

மேலும் அஜித் நடித்து வரும் துணிவு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் உதயநிதியை எதிர்த்து தங்களால் படம் வெளியிட முடியாது. ஆகையால் லலித்திடம் நீங்கள் நேரடியாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சென்று வாருங்கள் என்று கூறியுள்ளார்களாம்.

Also Read : வாரிசு சூட்டிங்கில் நடக்கும் அநியாயம்.. 250 கோடிகளில் லாபம் பெற்றும் நடக்கும் மோசமான சம்பவம்

தற்போது லலித் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறாராம். ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டது.

ஆனால் அப்போது விஜய் மற்றும் உதயநிதி இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தை தனது உறவினரான லலித்திடம் விஜய் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது உதயநிதி தலையிட்டால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற நிலைமை எழுந்துள்ளது.

ஆகையால் விஜய்யின் ஆசை நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ரெட் ஜெயண்ட் வசம் உள்ளது. அவர்களை பகைத்துக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவில் எந்தப் படத்தையுமே வெளியிட முடியாது. வாரிசு படத்திற்கும் தற்போது அதே நிலைமை தான்.

Also Read : துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு

Trending News