வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சென்சார் போர்டுக்கு தண்ணி காட்டிய வாரிசு.. உண்மை வெளிப்பட்டதால் திக்குமுக்காடிய வம்சி

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு அதன் எதிரொலியாக சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஜய் பேச்சு தான்.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு படத்தின் மூலம் வசூலை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை படுஜோராக பார்த்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் வாரிசு படம் ஆடியோ லான்ச் எல்லாம் கோலாகலமாக தான் நடத்த முடிந்தது. ஆனால் படத்தில் இன்னும் ஆடியோ வேலைகள் முடியவில்லை.

Also Read: இந்தியாவிலேயே அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார், மறுத்த 3 பாலிவுட் ஹீரோக்கள்.. மறுப்பு தெரிவிக்காத விஜய்யின் பேராசை

சென்சாருக்கு அனுப்பப்பட்ட நேரத்தில் கூட முழு வேலைகளும் முடியவில்லை. ஆனால் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இன்னும் பேக்ரவுண்ட் மற்றும் ஆடியோ டிராக் வேலைகளை முழுமையாக முடிக்கவில்லை. சும்மா டம்மியான ட்ராக்கில் போட்டு சென்சாருக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.

இதனால் வம்சி சற்று தலை வலியுடன் சுற்றுகிறாராம். அதுமட்டுமின்றி 8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் அஜித் விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியான துணிவு படத்தின் டிரைலர் வாரிசு படக் குழுவிற்கு பயம் காட்டி உள்ளது.

Also Read: உங்க பங்ஷனால் போலீசுக்கு தான் தலைவலி.. ரசிகர்கள் செய்த வேலையால் தில் ராஜிக்கு வந்த நெருக்கடி

இதனால் புத்தாண்டு அன்று நேற்று ரிலீஸ் செய்ய இருந்த வாரிசு படத்தின் டிரைலரை வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர். ஏனென்றால் துணிவு படத்தின் டிரைலருக்கு நிகராக வாரிசு படத்தின் டிரைலரும் மிரட்ட வேண்டும் என்பதற்காக, ஒரு சில காட்சிகளை சேர்த்து வேற விதமாக டிரைலரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும் பீஸ்ட் படத்தில் இருந்த தவறை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே வாரிசு பணத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 25 நிமிடமும், இரண்டாம் பாதியில் 1 மணி நேரம் 27 நிமிடமும் ஓடும் விதமாக ரசிகர்களுக்கு போரடிக்காமல் படத்தின் நேரத்தையும் குறைத்து இருக்கின்றனர். இப்படி நாலா பக்கமும் வாரிசு படத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து விழி பிதுங்கி நிற்கிறார் வம்சி.

Also Read: வாரிசுக்கு துணிவு காட்டிய பயம்.. அதிரடியாக விஜய் போட்ட கட்டளை

Trending News