வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இது வெறும் ஆரம்பம், இனிமேதான் ஆட்டமே இருக்கு.. ஓவர் பில்டப்பில் வெளிவந்துள்ள ஜவான் வீடியோ

Movie Jawan: பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார் அட்லீ. ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது ஜவான் படம். கிட்டத்தட்ட பல வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ஜவான் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். ஏனென்றால் ஷாருக்கான் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் இந்த வருடம் பதான் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி பாலிவுட் சினிமாவையே இப்படம் தான் தூக்கி நிறுத்தியது.

Also Read : மூட்டை முடிச்சை கட்டிய அட்லீ.. ஷாருக்கான் விட்ட டோஸால் ஜவானுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

மேலும் இதே ஆண்டு ஷாருக்கான் மற்றொரு தரமான படமான ஜவான் படத்தை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜூன் மாதமே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சில காரணங்களினால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இப்போது ஜவான் படத்தில் முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதில், என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது ராஜா, இது வெறும் ஆரம்பம், இனிமேதான் இருக்கு என ஓவர் பில்டப் கொடுக்கும் படியாக வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. மேலும் இப்படத்தில் நயன்தாரா பக்கா ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பில்லா பட ரேஞ்சுக்கு இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

Also Read : கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

அதேபோல் விஜய் சேதுபதியும் இதுவரை நடித்த கதாபாத்திரத்தில் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் பான் இந்திய மொழி படமாக வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த செய்தி ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News