வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

மதத்தால் சர்ச்சைக்குள்ளான சண்டைக்கோழி நடிகை.. ஓவர் நைட்டில் காணாமல் போன விஜய் பட ஹீரோயின்

Vijay Movie Heroine: நடிக்க வந்த குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்ற நடிகை ஒருவர் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த இவர் திடீரென எங்கு சென்றார் என்று தெரியாத அளவுக்கு சைலன்ட் ஆனார்.

ஆனால் சில வருடங்களிலேயே புது அவதாரத்துடன் திரும்பி வந்த நடிகை இப்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். மேலும் ரொம்பவும் க்யூட்டான மற்றும் நடிப்பு அரக்கி என பெயர் எடுத்த இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த காலமும் உண்டு.

Also read: கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

அதனாலேயே இவருக்கு சினிமா மீது ஒரு வெறுப்பு வந்தது. அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் மீரா ஜாஸ்மின். துள்ளலான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் நடிப்பு என்று வந்துவிட்டால் கேரக்டராகவே மாறிவிடுவார். அதனாலயே இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தட்டிச் சென்றார். அதில் இவர் நடித்த சண்டைக்கோழி பலரின் விருப்ப படமாகும். அப்படிப்பட்ட இவர் மத சர்ச்சையில் சிக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.

அதாவது மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்த மீரா ஜாஸ்மின் அங்கு புகழ்பெற்ற ஒரு கோவிலை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த கோவில் இந்துக்கள் மட்டுமே வழிபட வேண்டும் என்ற விதிமுறை கொண்டது. அதனால் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பெயரை வெறும் மீரா என்று சொல்லிக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.

Also read: ஹீரோவைவிட வில்லன்களை பெரிதும் பேசப்பட்ட 5 படங்கள்.. கடைசி வரை நின்று அடித்த விஜய் சேதுபதி

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் மதக்கலவரம் உருவாவதற்கும் வழி வகுத்தது. அதன் பிறகு மீரா ஜாஸ்மின் மன்னிப்பு கேட்டதன் பேரில் இந்த பிரச்சனை ஓய்ந்து போனது. இது மட்டும் இன்றி புதிய கீதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்க இருந்த போதும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது அப்படத்தின் பெயர் முதலில் கீதை என்றுதான் வைக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்துவ பெண் நடிக்கும் இதில் ஏன் இப்பெயர் வந்தது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அதன் பிறகு இயக்குனர் புதிய கீதை என்று பெயரை மாற்றினார். இப்படி மீரா ஜாஸ்மின் எது செய்தாலும் பிரச்சினையாகவே முடிந்தது. அதன் காரணமாகவே இவர் சினிமா துறை வேண்டாம் என முடிவு செய்து திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆனார். அதன் பிறகு சில காலங்களிலேயே தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Also read: வில்லன் இல்லாமல் விஜய் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலையையும் சாதகமாகிய தளபதி

Trending News