விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற தொடர்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் 900 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக 100 எபிசோடை கடக்கவே பல சீரியல்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட மூன்று வருடங்களை தாண்டி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Also read:டிஆர்பி-யில் மல்லுக்கட்டும் சன், விஜய் டிவி.. டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட்!
அதாவது விஜய் டிவியில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் பல சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் சமீப காலமாக ஒரே கதையை உருட்டிக் கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இத்தொடரின் கதாநாயகன் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து தன்னுடைய குழந்தைதான் லட்சுமி மற்றும் ஹேமா என்பது தெரிய வந்தால் இத்தொடர் முடிந்துவிடும். ஆனால் அதை மட்டும் செய்யாமல் தொடரை ஜவ்வாக இழுத்து வந்தார் இயக்குனர். தற்போது பாரதி கண்ணம்மா தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
Also read:அருள்மொழிவர்மனை வைத்து ப்ரோமோஷன்.. சன் டிவியை ஒழித்து கட்ட விஜய் டிவியின் பிரம்மாண்ட முயற்சி
அதாவது பாரதியின் மருத்துவமனைக்கு வரும் ஒருவர் இது தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என வாதாடுகிறார். இதற்கு ஒரே வழி டிஎன்ஏ டெஸ்ட் என பாரதி கூறுகிறார். ஊருக்குத்தான் உபதேசமா உங்களுக்கு இல்லையா என்று கண்ணம்மா கேட்கிறார். இதனால் பாரதியும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முற்படுகிறார்.
இதைத்தொடர்ந்து பாரதி தனது தப்பை உணர்ந்து அவரது குழந்தைகளையும், கண்ணமாவையும் ஏற்றுக் கொள்ள உள்ளார். மேலும் வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் திருமணம் ஆக உள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா தொடர் இனிதே முடிவுக்கு வருகிறது.
Also read:சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்