ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நல்ல பெயர் எடுக்க விஜய் தேவரகொண்டா செய்த கேவலமான செயல்.. நம்பியவர்களுக்கு வைத்த ஆப்பு

சமீபகாலமாக திரையுலகில் பைலிங்குவல் திரைப்படங்களின் வரவு அதிகமாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இரு மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அதேபோன்று கடந்த மாதம் வெளியான இளம் நடிகர் ஒருவரின் பைலிங்குவல் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான லிகர் திரைப்படம் மிகப்பெரிய ஆரவாரத்துடன் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியானது. ஆனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டது.

Also read : லோகேஷுடன் கைகோர்க்கும் காவல்துறை.. தளபதி 67ல் இணைய இப்படி ஒரு வாய்ப்பா?

இப்படி ஒரு மோசமான விமர்சனங்களை படகுழு கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா மிகப்பெரிய சர்ச்சைகளையும் சந்தித்தார். தேவையில்லாமல் அவர் பேசிய கருத்துக்கள் தான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்த நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்திலிருந்து பெரும் பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் அடுத்த திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க அவர் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது.

Also read : லைகர் மரண அடி, விஜய் தேவர கொண்டா எடுத்த தில்லான முடிவு.. திகைத்துப்போன திரையுலகம்

இதனால் அவர் மீது இருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது கிடைத்த தகவலின் படி அவர் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தது எல்லாம் வெறும் கட்டுக்கதை தான். அவர் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு ரூபாய் கூட திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இப்படி ஒரு செய்தியை விஜய் தேவரகொண்டா தான் தன்னுடைய மேனேஜரை வைத்து பரவச் செய்தாராம். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கு இருந்த கெட்ட பெயர் மாறி நன்மதிப்பு உண்டாகும் என்பது தான் அவருடைய திட்டம். அவர் நினைத்தது போன்று அனைத்தும் நடந்தது. அதன் பிறகு விஜய் தேவரகொண்டா தன்னுடைய போன் நம்பரை கூட மாற்றிவிட்டாராம். அவர் பரப்பிவிட்ட செய்தியை உண்மை என்று நம்பி அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தவர்கள் தற்பொழுது ஸ்விட்ச் ஆப் என்ற செய்தியால் இடிந்து போயிருக்கின்றனர்.

Also read : அடிமேல் அடிவாங்கும் லைகர்.. விஜய் தேவரகொண்டாவால் நாசமாய் போய் விட்டதாக புலம்பல்

Trending News