வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

700 நாட்களாக போராடிவரும் பறந்தூர் கிராம மக்கள்.. அலட்சியப்படுத்தும் அரசு, சீமான் தட்டி கேட்க காரணம்

NTK Seeman: “மக்களால் மக்களுக்காக நடத்தும் அரசாங்கம்” தான் மக்களாட்சி மற்றும் ஜனநாயகம் என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. ஆனால் தற்போது பார்க்கும் பொழுது மக்களின் கண்தொடைப்புக்காக சில சின்ன விஷயங்களை பெருசாக காட்டி அவர்களை சந்தோஷப்படுத்தி விட்டு பின்னாடியே அவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பையும் வைக்கும் விதமாகத்தான் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று மக்கள் கருத்துக் கணிப்பு படி ஒவ்வொருவரும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பள்ளியில் காலை சிற்றுண்டி, இலவச பேருந்து, படிக்கும் மகளிர்க்கு ஆயிரம் என மக்களை கையேந்தும் நிலைக்கு வைத்து வளர்ச்சி என பேசி வருகிறார்கள். பின்னாடியே பால் விலை முதல், சிலிண்டர், மின்சார வாரியம் போன்ற பல விஷயங்களில் பணத்தைக் கூட்டி மக்களை அவதிப்படும் நிலைமைக்கு தள்ளிவிட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி கிராம மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி தான் வாழ்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களை விட நாம் அனைவரும் விவசாயத்தை நம்பி தான் பிழைக்கிறோம். அவர்கள் சரிவர விவசாயத்தை செய்தால் தான் நாம் மனதார வயிறார சாப்பிட முடியும். ஆனால் அதையெல்லாம் கெடுக்கும் விதமாக பரந்தூர் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக நோகடித்து வருகிறார்கள்.

கிராம மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பும் சீமான்

அதாவது சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காக பரந்தூரில் சேர்ந்த சில கிராம நிலங்களை கைப்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 700 நாட்களாக போராடி வருகிறார்கள். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் போராடியும் அவர்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதற்கு ஏற்ப அரசாங்கம் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் அந்த மக்கள் நாங்கள் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் மானமிழந்து விவசாயமில்லாமல் முடங்கிப் போய் கிடப்பதற்கு பதிலாக நாங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவிடம் தஞ்சம் அடையப் போகிறோம் என்று கிளம்பி நிலையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இந்த கிராம மக்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சீமான் அவருடைய எதிர்ப்பு குரலை கொடுத்து வருகிறார்.

அதாவது பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 பரப்பளவு அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 பரப்பளவு அளவிலான நிலத்தினையும் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று சீமான் கொந்தளித்து பேசி இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் வேளாண்நிலங்களை பாதிப்பதோடு ஈர நிலங்களையும் அழித்துவிட்டு அப்படி என்ன பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். பாஜக அரசுக்கு செயல்படுவதை நிறுத்திவிட்டு உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு உண்மையாக இருங்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தட்டி கேட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் பிழைக்க முடியாமல் ஆந்திராவை நோக்கி தஞ்சமடைய போக நினைக்கும் விவசாயிகளின் நிலைமை உங்களுக்கு மிகப்பெரிய அவமானமாக தெரியலையா? இத்தனை கிராம மக்களை கஷ்டப்படுத்தி அப்படி என்ன அந்த இடத்தில் விமானம் வேண்டும்? விளைநிலங்களை அழித்து 5000 ஏக்கர்ல எதுக்கு ஏர்போர்ட்? G Square கிட்ட கமிஷன் வாங்கவா? என்று தமிழக அரசு திட்டத்திற்கு எதிராகவும் பரந்தூர் கிராம மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாகவும் சீமான் உரிமை குரலை கொடுத்து வருகிறார்.

சீமானின் கோட்பாடுகள்

Trending News