வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அந்த 3 நாட்கள் மழையே வரக்கூடாதுன்னு யாகம் நடத்தும் கிராம மக்கள்.. சைலன்டாக வேடிக்கை பார்க்கும் தளபதி

Vijay in TVK: வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்துவதற்காக விஜய் தயாராகி இருக்கிறார். இந்த மாநாட்டு மூலமாக எந்தவித சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது என்பதால் ரொம்பவே கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களும் இந்த மாநாட்டில் தளபதி சொன்னபடி எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு பம்பரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது இது பற்றிய வீடியோக்களும் போட்டோக்களும் தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் தளபதி எந்த மாதிரியான பேச்சுக்களை கொடுத்து மக்களை தன்வசக்படுத்தப் போகிறார் என்பதையும், மக்களுக்காக என்ன கொள்கையை சொல்லப் போகிறார் என்பதை கேட்கவும் இந்த முதல் மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் இறங்கிய முதல் மாநாடு என்பதால் இதை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும் என்ற விஷயத்திலும் கவனமாக இருக்கிறார்கள். இதற்கான பலத்த ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் எந்த நேரத்தில் வேணாலும் பலத்த மழை பெய்யலாம்.

ஆனால் அப்படி மழை பெய்து விட்டால் முதல் மாநாடு தடங்கலாக போய்விடும் என்பதால் அங்கு இருக்கும் கிராம மக்கள் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி சாலையில் மூன்று நாட்களுக்கு மழையே பெய்யக்கூடாது என்று யாகம் நடத்தி வருகிறார்கள். அத்துடன் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இந்த யாகத்தை நடத்தி வருகிறார்கள்.

அதாவது இது ஒரு பக்கம் மூடநம்பிக்கையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இதற்கெல்லாம் ஏன் மறுப்பு சொல்லாமல் தளபதி சைலண்டாக இருந்து வேடிக்கை பார்க்கிறார். மழை பெய்கிறது நம்ம கைல எதுவும் இல்ல, ஆனாலும் கிராம மக்கள் விஜய்க்காக இந்த மாதிரி விஷயங்களை செய்ததை பார்த்தால் கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது.

இந்த மாதிரி விஷயங்களுக்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். இவங்களுக்கு பாஜக எவ்வளவோ பரவாயில்லை என்றும் இப்பொழுதுதான் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது என்றும் மக்கள் மனசு வச்சா எல்லாம் நடந்துருமா எனவும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Trending News