வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பு.. விஸ்வரூப வளர்ச்சி அடைந்த வில்லன் நடிகர்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்த வெள்ளிதிரைக்கு வந்தார் என்று பலரும் சர்வ சாதாரணமாக சொன்னாலும் இந்த உயரத்தை அடைய அவர் பட்ட அவமானம் பல உண்டு. அதுவும் பல ஹீரோக்கள் அவரை சின்னத்திரையில் இருந்து வந்தவர் என அதையே சொல்லி கேலி கிண்டல் செய்து வந்தனர்.

ஆனாலும் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து இன்று வரை அதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் வளர்ந்தது மட்டுமின்றி தன்னுடைய படத்தின் மூலமாக இப்போது பிரபல வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகரை வளர்த்துவிட்டுள்ளார். அதாவது அந்த நடிகர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க சிவகார்த்திகேயன் தான் காரணம்.

Also Read : 20 வருடத்தில் விஷால் செய்யாத சாதனையை , 10 வருடங்களில் சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்.. விழுந்து விழுந்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல

அதாவது இவரது நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் தான் தேர்ந்தெடுத்தாராம். அந்தச் சமயத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக பகத் பாசில் வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலைக்காரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு இவர் தான் செட்டாவார் என சிவகார்த்திகேயன் ஆணித்தரமாக நம்பி உள்ளார்.

அப்போது மற்றவர்கள் கூட வேலைக்காரன் படத்தில் பகத் பாசில் நடித்தால் சிவகார்த்திகேயனை மிஞ்சி விடுவார் என அவரிடமே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் எனக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று பகத் பாசிலை நடிக்க வைத்தார்.

Also Read : சிவகார்த்திகேயன் போல் கடனில் தவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்த பரிதாபம்

அதன்படி படமும் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து பகத் பாசிலுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. அதன்படி லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் பகத் பாசில் மிரட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் புஷ்பா.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் பகத் பாசில் நடித்து பாராட்டைப் பெற்றார். இப்போது பகத் பாசிலுக்கு ஹீரோ வாய்ப்பை தாண்டி வில்லன் வாய்ப்பு தான் குவிந்து வருகிறதாம். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது சிவகார்த்திகேயன் தான்.

Also Read : சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

Trending News