கிரிமினலாக யோசிக்கும் எஸ்ஜே சூர்யா.. பட்ஜெட் ரீதியாக சம்பளத்தை பிரித்து ஹீரோ வாய்ப்புக்கு அடிபோடும் வில்லன்

Sj Surya: இதுவரை எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படங்களை பார்த்தவர்கள் அனைவரும் இவர் என்ன வித்தியாசமான நடிப்பை கொடுக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் நடிப்பில் மட்டுமில்ல நிஜத்திலும் வித்தியாசமான ஆளாகத்தான் பல இடங்களில் பேசி வருகிறார்.

அந்த வகையில் புரியாத புதிராக, தான் என்ன சொல்கிறேன் என்று மற்றவர்களுக்கு விளங்காதபடி பேசக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் இயக்குனராகவும், நடிகராகவும் பயணத்தை தொடங்கினார். ஆனால் தொடர்ந்து இதில் வெற்றியை பார்க்க முடியாததால் இவருக்கு தகுந்த வில்லன் கேரக்டரை எடுத்து நடித்து வருகிறார்.

Also read: பணத்தை வாங்கி தயாரிப்பாளர்களை டீலில் விட்ட 5 ஹீரோக்கள்.. அட்வான்ஸ் தொகையை ஏப்பமிட்ட எஸ்ஜே சூர்யா

அந்த வகையில் தற்போது பல படங்களில் முக்கிய வில்லனாக கமிட் ஆகி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தை மக்களும் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது. அதனால் இவருக்கு தகுந்த வரவேற்பு மக்களிடம் கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இவருடைய மார்க்கெட் ஒவ்வொரு படத்திற்கும் கூடிக் கொண்டே இருக்கிறது.

அதனால் தற்போது பட்ஜெட் ரீதியாக இவருடைய சம்பளத்தை பிரித்து விட்டார். முக்கியமாக ஹீரோவாக நடிப்பதென்றால் எனக்கு இந்த அளவுக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று குறைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது 200 கோடி பட்ஜெட் படங்களாக இருந்தால் இவருடைய சம்பளம் 15 கோடியாக இருக்க வேண்டுமாம்.

Also read: வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

அடுத்ததாக 100 கோடி பட்ஜெட் படங்கள் என்றால் 8 கோடி சம்பளம், 50 கோடி பட்ஜெட் என்றால் ஐந்து கோடி சம்பளம் என்று மூளையை கசக்கி கிரிமினலாக பக்கா பிளான் போட்டு பிரித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவரை ஹீரோவாக நடிக்க வைத்தால் வெறும் மூன்று கோடி கொடுத்தால் மட்டுமே போதுமாம்.

இதிலிருந்து இவருக்கு மிகவும் பிடித்தது ஹீரோ என்ற கேரக்டர் தான். அதற்காகத் தான் தற்போது ஹீரோவுக்கான சம்பளத்தை குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு வலை வீசி கொண்டு வருகிறார். எது எப்படியோ எஸ் ஜே சூர்யா என்றால் நாங்கள் அவருடைய நடிப்புக்காக போய் பார்ப்போம் என்று ரசிகர்களும் இவரை வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்