வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எம்ஜிஆர், சிவாஜி சினிமாவில் புரட்டி எடுத்த நிஜமான ஹீரோ.. நம்பியாருக்கு முன்னரே மிரட்டிய வில்லத்தனம்

Villain P.S.Veerappa: தன்னுடைய தனிப்பட்ட திறமையால் தமிழ் சினிமாவில் மாபெரும் இடத்தை பிடித்தவர்கள் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி. இந்நிலையில் இவர்களுக்கு வில்லனாக இடம்பெற்ற நம்பியாருக்கு முன்னரே,  இவர்களால் புரட்டி போடப்பட்ட ஒரு நடிகரை பற்றிய சில தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிட்ட வில்லன்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பார்கள். அவ்வாறு படத்தில் தோன்றும் ஒவ்வொரு வில்லன்களுக்கும் ஒவ்வொரு ட்ரேட் மார்க் வசனம் இருக்கும். அதைக் கொண்டே அவர்களை, மக்கள் பெரிதும் பேசுவார்கள்.

Also Read: எதிர்க்க திராணி இல்ல, 18 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த செந்தில் பாலாஜி.. குமுறிய விஜய் டிவி பிரபலம்

அவ்வாறு நம்பியாருக்கு முன்னரே எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஹீரோக்களால் புரட்டி எடுக்கப்பட்டவர் தான் பி எஸ் வீரப்பா. 1950 களில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வில்லனாய் களமிறங்கியவர். நாடகத்தில் நடித்த இவரின் நடிப்பை பார்த்து கே பி சுந்தராம்பாளால் ஈர்க்கப்பட்டு அதன் பின் தான் சினிமா வாய்ப்பு பெற்றார்.

தன் முதல் படத்திலேயே எம்ஜிஆர் உடன் இணையும் வாய்ப்பை பெற்ற இவர் தன் சிரிப்பை ட்ரேட் மார்க்காக கொண்டு புகழ்பெற்றார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட பல படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. மேலும் சபாஷ் சரியான போட்டி என்ற வசனத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டவர்.

Also Read: ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

அந்த காலகட்டத்தில் இவரின் சிரிப்பை கண்டு அரங்கமே அதிருமாம். ஹீரோக்களை விட இவருக்கு கிடைத்த விமர்சனங்கள் பெரிதாக இருந்த நிலையில் அதை தொடர்ந்து பல படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அதில் ஏற்பட்ட வீழ்ச்சியால் சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டார்.

இவரின் படைப்புகளில் கூடுதல் சிறப்பாக மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி என்பது இவரின் ட்ரேட் மார்க் வசனம். காலம் மாறினாலும் இவரின் வசனம் இன்று வரை பேமஸாக தான் இருந்து வருகிறது. அவ்வாறு புகழ்பெற்ற இவர் சினிமாவில் சம்பாதித்த பணங்களை கொண்டு ஏழை மக்களுக்கு, பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கிறாரே! லியோவால் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட தலைவலி

Trending News