வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மாஸ்டர்ல மிஸ்ஸான வில்லனை ரஜினிக்கு லாக் செய்த லோகேஷ்.. குருவுக்கு தண்ணி காட்ட வரும் சிஷ்யன்

Rajini-Lokesh: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்திற்கு அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லைக்கா, ஞானவேல் கூட்டணியில் தலைவர் 170 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவரது கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கிறார்கள். ரஜினி இதே வேகத்துடன் தனது அடுத்தடுத்த படங்களிலும் செயல்பட இருக்கிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் முதல் முறையாக தலைவர் 171 படத்தில் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் லோகேஷ் முக்கிய நடிகர் ஒருவரை லாக் செய்து வைத்திருக்கிறார். அதுவும் விஜய்யின் மாஸ்டர் நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் முதல் சாய்ஸ்.

ஆனால் சில காரணங்களினால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் அதன் பிறகு சந்தனம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதாவது ரஜினியின் தீவிர ரசிகர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் மீது உள்ள ஈடுபாடு காரணமாகத் தான் லாரன்ஸ் சினிமாவில் கால் பதித்தார். அதோடு மட்டுமல்லாமல் ரஜினியின் பக்தனாகவே வாழ்ந்து வருகிறார்.

Also Read : சிந்தாம சிதறாம எல்லாமே வேணும்.. ரஜினியை உச்சி குளிர வைக்கும் வேலையில் இறங்கிய விஜய்

பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் லாரன்ஸ் மோத விட உள்ளார் லோகேஷ்.

இதுவரை தன்னை குருவாக நினைத்துக் கொண்டிருந்த ரஜினியை முதல்முறையாக படத்தில் லாரன்ஸ் எதிர்க்க இருக்கிறார். ஆகையால் தலைவர் 171 படம் தாறுமாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்போதுமே லோகேஷின் படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் ரஜினிக்கு இணையான தன்னால் முடிந்த அளவுக்கு டஃப் லாரன்ஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தலைவர் 171 படத்தில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விபரம் விரைவில் வெளிவர இருக்கிறது.

Also Read : ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்ய இப்படி ஒரு காரணமா?. பலே திட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

Trending News