Gettimelam Serial: ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டி மேளம் சீரியல் ஆரம்பித்து 20 எபிசோடு முடிந்திருக்கிறது. ஆனால் அதற்குள் இந்த நாடகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. தினமும் ஒரு மணி நேர எபிசோடில் துளசி மற்றும் வெற்றியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது. அந்த வகையில் இவருடைய காம்பினேஷன் எப்பொழுது ஒன்று சேரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் துளசிக்கு தற்போது நின்று போன கல்யாணத்தின் மூலம் தியா பாப்பாவை நல்லபடியாக பார்க்கும் பொறுப்பு வந்திருக்கிறது. ஆனால் பணத்தாசை பிடித்த கும்பலிடம் இருந்து தியாவை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரியாமல் துளசி தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் துளசி மீது காதல் கொண்ட வெற்றி, துளசிக்கு வரும் ஆபத்திலிருந்து துளசி ஆசைப்படும் விஷயத்தை நிறைவேற்றி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் துளசியின் தங்கை அஞ்சலியை பார்த்ததுமே மகேஷ் காதலிக்க ஆரம்பித்து விட்டார். உடனே வீட்டிற்கும் வந்து அஞ்சலியை பொண்ணு கேட்டு சிவராமன் குடும்பத்தில் இடம் பிடித்து விட்டார். அவர்களும் அஞ்சலி ஓகே சொல்லிவிட்டார் என்று மகேஷ்க்கு கல்யாணம் பண்ணுவதற்கு முன் வந்து விட்டார்கள். அத்துடன் அஞ்சலி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அஞ்சலியின் ஆசைகள் அனைத்தையும் மகேஷ் நிறைவேற்றி விட்டார்.
அதனால் முதலில் அஞ்சலி மற்றும் மகேஷின் கல்யாணம் நடக்கும் படி குடும்பத்தில் இருப்பவர்கள் ஏற்பாடு பண்ணி விட்டார்கள். அதற்கு ஏற்ற மாதிரி அஞ்சலி மற்றும் மகேஷின் கல்யாணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து விட்டது. இதற்கான புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளிவர ஆரம்பித்துவிட்டது. அத்துடன் இந்த கல்யாணத்திற்கு மாப்பிள்ளை கோலத்தில் அம்சமாக வெற்றியும் வந்திருக்கிறார்.
அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பமாக அனைவரும் சேர்ந்த நிலையில் துளசியை பார்த்தபடியே வெற்றியும் ஜொள்ளுவிட்டு இருக்கிறார். மேலும் துளசியின் தவிப்பு என்னவென்று புரிந்து கொண்ட வெற்றி, தியாவை துளசியுடன் சேர்த்து வைக்கும் விதமாக துளசி மனதில் இடம் பிடிக்க போகிறார்.