செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மொத்தமாக குணசேகரனுக்கு சமாதி கட்டும் குடும்பம்.. நாளுக்கு நாள் கொஞ்சம் ஓவராக தான் போகுது

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்த நாடகமாக அனைவரும் மனதையும் கவர்ந்து விட்டது. ஆனால் குணசேகரன் மாதிரி ஆட்களை அடியோடு வேரறுக்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக, அவர் வீட்டில் இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்தே அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் அந்த வீட்டில் உள்ள பெண்கள் அமைதியாக இருந்த நிலையில் தற்போது போகப் போக பூகம்பமாக ஒவ்வொருவரும் கோபத்தை வெடித்து வருகிறார்கள். அந்த வகையில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் சொல்லுவாங்க, அது போல அம்மாக்களை விட தற்போது இவர்களுடைய பொண்ணுங்கள் தான் குணசேகரனை ஒவ்வொரு நாளும் வச்சு செய்து வருகிறார்கள்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மீனாட்சியின் எக்ஸ் புருஷன்.. இந்த அவமானம் தேவையா?

ஆனால் குணசேகரனின் பொண்ணு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அவரை விட டபுள் மடங்காக வருகிறார். அந்த வகையில் தர்ஷினி பேசியது சரியாக இருந்தாலும், வயதுக்கு மீறிய வார்த்தைகளை பேசி அப்பா என்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் ஏதோ நமக்கு எல்லா விபரம் தெரியும் என்ற நினைப்பில் அதிக பிரசிங்கித்தனமாக பேசுகிறார்.

முதலில் இந்த நாடகத்தில் ஆரம்பித்த கதை வேற, ஆனால் இப்பொழுது அதை விட்டுவிட்டு ட்ராக் வேற விதமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கொஞ்சம் கூட விறுவிறுப்பை இல்லாத ஜீவானந்தம் கேரக்டரை கொண்டு வந்து அவ்வப்போது போரடிக்க வைக்கிறார்கள்.

Also read: குணசேகரனின் ஆட்டத்தை முறியடிக்கும் மருமகள்கள்.. ஜீவானந்தத்தால் மீண்டும் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

இதில் அப்பத்தா ஏன் தேவை இல்லாமல் கோமா ஸ்டேஜ்க்கு கொண்டு போனாங்க, அந்த சொத்துக்காக எல்லோரும் என்ன பண்றாங்க என்று புரியாமலே கதை போய்க் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தாரா பாப்பா மனதில் இவ்வளவு வேதனையை திணித்து, தன் அப்பா செய்யும் தவறை சுட்டிக்காட்டியது பார்க்க நன்றாக இருந்தது.

இதற்கு அடுத்து அப்பத்தாவின் சொத்து ஜீவானந்தம் நினைத்தபடி அவருடைய பெயருக்கு நல்லபடியாக ரிஜிஸ்ட்ரேஷனை முடித்து விட்டார். இனி இதை வைத்து என்ன பிளான் பண்ணப் போகிறார், இது குணசேகரன் மற்றும் ஜனனிக்கு தெரிந்தால் அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை விறுவிறுப்பாக காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

Also read: எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

Trending News