திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ரத்த சொந்தமா? இணையத்தில் கசிந்த மொத்த கதை

Maamannan Story: மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதலாவதாக உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் என்று அறிவித்ததால் ரசிகர்கள் ஆர்வமாக இப்படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். மறுபுறம் இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்துடன் ஒப்பிட்டு மாமன்னன் படத்தை விமர்சனம் செய்திருந்தார்.

ஆகையால் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் எப்படி தான் எடுத்துள்ளார் என்று பார்க்க எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஏற்கனவே உலக நாயகன் கமலிடம் மாமன்னன் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. கமலும் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டி சென்றாராம்.

Also Read: மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

இப்போது இணையத்தில் மாமன்னன் படத்தின் முழு கதையும் கசிந்துள்ளது. அதன்படி உதயநிதி மற்றும் வடிவேலு ரத்த சொந்த உறவுகளாம். அதாவது தேவர் மகனின் இசக்கி கதாபாத்திரத்தை தான் வடிவேலுவாக மாமன்னனின் சித்தரித்துள்ளார் மாரி செல்வராஜ். அதன்படி இசக்கியின் மகன் தான் உதயநிதி.

அத்திவீரன் என்ற ராசா கண்ணு கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். இவர் மாணவர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத் தருபவராக இருக்கிறார். இந்நிலையில் சிறு வயதிலேயே தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தின் மூலமாக பேசாமல் இருக்கிறார்.

Also Read: மாமன்னன் பட ரிலீஸ் க்கு வந்த புது சிக்கல்.. சுத்தி அடிக்கும் கர்மாவால் உதயநிதி படும் பாடு

இந்நிலையில் வடிவேலு தனது ஊரில் செல்வாக்கு மிக்க மனிதர்கள் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டுவதை தடுப்பதற்காக ஆதாரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் உதயநிதிக்கு தனது தந்தையும் ஒரு அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விஷயம் தெரிய வருகிறது.

அதன் பிறகு வடிவேலு மற்றும் உதயநிதி இருவரும் அதாவது அப்பா, மகன் கூட்டணி சேர்ந்து ஒரு நல்ல சமூக மாற்றத்தை கொண்டு வருகிறார்களா என்பது தான் மாமன்னன் கதையாம். மேலும் தன்னுடைய பாணியில் மாமன்னன் படத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார்.

Also Read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

Trending News