திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்தமாய் மகிழ் திருமேனி மீது வெறுப்பில் இருக்கும் டீம்.. அஜித் லைக்கா ஃபுல் யூனிட்டும் கொடுக்கும் டார்ச்சர்

Ajith in Vidamuyarchi: அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால் விக்னேஷ் சிவனை ஓரம் கட்டி விட்டு மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தது தான்.

சரி இதாவது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று பார்த்தால் இதுவரை அஜித் பார்க்காத அளவிற்கு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறார். இதற்கெல்லாம் காரணம் மகிழ் திருமேனி தான். பொறுமையாக எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் ஒட்டுமொத்த டீமிடமிருந்து வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

இப்பொழுது அஜித்தின் மனநிலைமை எப்படி இருக்கிறது என்றால், ஏன் தான் இவர்கிட்ட வந்து மாட்டினோமோ என்று முழிக்கும் அளவிற்கு இருக்கிறது. அதாவது சூட்டிங் நேரத்தில் சில காட்சிகள் எடுத்து முடித்த பிறகு நன்றாக இருந்தாலுமே மூன்று நான்கு தடவை ரீடேக் பண்ண வைக்கிறாராம்.

அஜித் லைக்கா கொடுக்கும் டார்ச்சர்

அதிலும் அவர் எதிர்பார்த்தபடி கச்சிதமாக இருந்தால் தான் அடுத்த காட்சிக்கே போகிறாராம். இன்னொரு விஷயம் சூட்டிங் முடிந்ததும் அன்றைக்கு எடிட்டரையும் கையோட கூட்டிட்டு போயிடுவாராம். அதன் பின் தினமும் எடுக்கும் காட்சியை இரவு முழுவதும் எடிட் பண்ணி சரியா இருக்கா இல்லையான்னு செக் பண்ணிட்டு இருக்காரு.

அப்படி சரியில்லை என்றால் அதை மறுநாளில் எடுக்க வைத்து அந்த நாள் ஃபுல்லா இதை வைத்து ஓட்டி விடுகிறார் என்று இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து இவருடைய ஸ்கிரிப்டையும் எடுத்துப் பார்த்தால் அதுவும் பெருசாக சொல்லும்படி இல்லை.

இதனால் அஜித் மற்றும் லைக்கா மொத்தமாக அப்செட்டில் இருக்கிறார்கள். இப்பொழுது அஜித்துக்கு வேற, உடல்நிலை பிரச்சனையால் கொஞ்சம் ரெஸ்டில் இருக்க வேண்டும். இதனால் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் அவ்வப்போது அஜித் போன் பண்ணி மற்ற விஷயங்களை விசாரித்துக் கொண்டு வருகிறார். அதே நேரத்தில் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்து வருகிறார். ஆக மொத்தத்தில் விடாமுயற்சி படத்தின் மொத்த டீமும் மகிழ் திருமேனி மீது காண்டில் இருக்கிறார்கள்.

Trending News