சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நடிகையால் பூதாகரமாக வெடித்த சண்டை.. மாஸ் ஹீரோவுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த மனைவி

பிரபல ஹீரோ ஒருவரின் வீட்டு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக இவர் பற்றி நம்ப முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது நடிகரும் அவருடைய மனைவியும் பிரிந்து விட்டதாகவும் அதற்கு காரணம் ஒரு நடிகை என்றும் திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.

அதற்கேற்றார் போல் நடிகரும் பல விழாக்களுக்கு தனியாகவே சென்று வருகிறார். எப்போதும் மனைவியுடன் வரும் அவர் இப்படி சிங்கிளாக வருவது பல கேள்விகளை எழுப்பியது. இது ஒரு புறம் இருக்க ஹீரோவுடன் நெருக்கம் காட்டும் நடிகை யார் என்று கிளம்பிய செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது வெறும் வதந்தி தான் என்று கூறினாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதே உண்மை.

Also read: அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

அந்த வகையில் தற்போது இந்த பிரச்சனை நடிகரின் வீட்டில் பிரளயத்தையே ஏற்படுத்தி இருக்கிறதாம். எப்படியும் கணவர் சரியாகிவிடுவார் என்று காத்திருந்த மனைவி தற்போது கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவர் தற்போது நடிகருக்கு கடைசி எச்சரிக்கை கொடுத்து இருக்கிறாராம்.

இனிமேலும் நடிகர் நடிகையின் பின்னால் சென்று கொண்டிருந்தால் விஷயம் வேறு மாதிரி ஆகிவிடும். மீடியாக்களில் அம்பலப்படுத்தி விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறாராம். இதற்கு நடிகரின் ரியாக்சன் என்ன என்று தான் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விஷயம் தற்போது காத்து வாக்கில் பரவிக் கொண்டிருக்கிறது.

இது எப்படி இருக்க நடிகையின் வீட்டிலும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. மகளைப் பற்றி பலரும் இப்படி காதுபட பேசி வருவதால் வருத்தத்தில் இருக்கும் அம்மா விரைவில் அவருக்கு திருமணம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறாராம். ஆனால் நடிகை தான் அதற்கு சம்மதிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் எப்போது தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: படத்துல நடிச்சா மட்டும் பத்தினி வேஷம்.. தவணை முறையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை

Trending News