200 கோடியை உதறி தள்ளிய சமந்தா.. 380 கோடி ஜீவனாம்சம் வாங்கிய பிரபல நடிகரின் மனைவி

samantha : சினிமாவில் காதல் வைரஸ் போல டைவர்ஸ் வைரஸ் தொற்றிக் கொண்டது. வருடத்திற்கு ஒன்று போய் மாதத்திற்கு ஒரு விவாகரத்து செய்தி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சமந்தா, தனுஷ், ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ் என அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருகிறார்கள். இதில் நாகச் சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு விவாகரத்து ஆனபோது 200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார். ஆனால் பிரபல நடிகரின் மனைவி 380 கோடி ஜீவனாம்சம் வாங்கி இருக்கிறார்.

380 கோடி ஜீவனம்சம் வாங்கிய பிரபல நடிகரின் மனைவி

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் தான் ஹ்ரித்திக் ரோஷன். இவர் சூசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஹான், ரிதான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

14 ஆண்டு திருமண வாழ்க்கையிலிருந்து இருவரும் பிரிந்துவிட்டனர். இதில் சூசன் தனக்கு 400 கோடி ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஹ்ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவிக்கு 380 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சம்மதித்துள்ளார். இதன் மூலம் அதிகத் தொகையை ஜீவனாம்சமாக சூசன் பெற்றுள்ளார்.

Leave a Comment