புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவரே? உன்னிப்பாக கவனிக்கும் ரசிகர்களின் யூகிப்பு!

ஜீ தமிழில் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி கொண்டு சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் சர்வைவர் நிகழ்ச்சியை கண்டு களிக்கின்றனர்.

சுமார் 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான ஐஸ்வர்யா கிருஷ்ணன், அடிப்படையிலேயே உயிர்வாழும் திறனை இயல்பாகவே கொண்டுள்ளார் என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு ஒவ்வொரு டாஸ்கிலும் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிகாட்டி வருகிறார். இதன் காரணத்தினால் தற்போது இவர் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு உடற்தகுதி குறித்து வழிகாட்டும் ஐஸ்வர்யா, நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். இதர போட்டியாளர்களை காட்டிலும் ஐஸ்வர்யா மட்டும் விளையாட்டுப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒவ்வொரு டாஸ்கிலும் நன்றாக விளையாடி வருகிறார்.

தற்போது, இவர் இந்த ரியாலிட்டி ஷோ மூலமாக பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் உடல் பணிகள், பழங்குடியினருக்கு கொடுக்கும் சவால்கள், புதிர்கள் போன்றவற்றிலெல்லாம் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடுகையில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

Survivor-Aishwarya-cinemapettai
Survivor-Aishwarya-cinemapettai

அத்துடன் ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் எந்த ஒரு பதட்டமும் அடையாமல், நிதானத்தை கடைபிடித்து, அனைத்திலும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

இவை அனைத்தும் வைத்து பார்க்கும் போது அனைத்து போட்டியாளர்களுக்கும் ஐஸ்வர்யா கிருஷ்ணனே டஃப் கொடுப்பார் என்றும், சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஐஸ்வர்யா இருப்பார் என்று இந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனிக்கும் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

Trending News