திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

எதிர்க்கட்சியின் கிராமசபை கூட்டத்தை சீர்குலைத்த பெண்.. இது நம்ம லிஸ்டிலயே இல்லயே!

வருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறாராம்.

அந்த வகையில் இன்று திமுகவின் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரான ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார்.

இந்த  நிலையில் எதிர்க் கட்சியினர் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது கேள்வி கேட்க அனுமதி இல்லாத ஒரு பெண், அனுமதியில்லாமல் மைக்கை வாங்கி ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்டுள்ளாராம். இதனால் கடுப்பான திமுகவினர், அந்தப் பெண்ணை கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஸ்டாலின் அந்தப் பெண்ணை பார்த்து, ‘நீங்கள் எஸ் பி வேலுமணி அனுப்பிய ஆள். தேவை இல்லாத கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்கள். தயவு செஞ்சு வெளியே போங்க’ என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தின் போது, ஒரு பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டு உள்ள தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News