Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், இதுவரை குணசேகரன் ஆணாதிக்கத்தை வைத்து பெண்களை அடிமையாக்க நினைத்தார். அதனால் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த மருமகள்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து சொந்தக்காலில் நின்னு ஜெயிப்பதற்கு முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்று முடிவு பண்ணிய அறிவுக்கரசி, குணசேகரன் வீட்டுக்குள் நாரதர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அதிலும் கதிரை மடக்க வேண்டும் என்பதற்காகவும் கதிரை வைத்து ஒவ்வொருவரையும் காலி பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் கதிருக்கு போன் பண்ணி உங்க அண்ணனோட சொத்து அனைத்தும் உங்களுக்கு தான் வந்து சேரும். அதே நேரத்தில் நந்தினிக்கு குடைச்சல் கொடுத்து ஒரேடியாக கதிர் வாழ்க்கையை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று அறிவுக்கரசி திட்டம் போட்டு விட்டார்.
ஏனென்றால் கதிர் மீது அறிவுக்கரசிக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் குணசேகரன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் காலி பண்ணி தனியாக ராஜ்ஜியம் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அதற்கு முதல் வேலையாக நந்தினி பிசினஸில் ஜெயிக்க கூடாது என்று முடிவு பண்ணினார். அதற்காக நந்தினிக்கு மசாலா பிசினஸில் ஆர்டர் கொடுத்த சிவசு வைத்து காய் நகர்த்தி விட்டார்.
அதாவது வாசு தங்கிய வீட்டில் நான்கு பெண்களும் தங்கப் போகிறார்கள். இதற்கு அட்வான்ஸ் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நந்தினி செக்கை பேங்கில் டிராப் பண்ணுகிறார். ஆனால் அந்த செக் ஸ்டாப் பேமெண்ட் என்று வந்து விட்டதால் சிவசுவை சந்தித்து பேசினார்கள். அப்படி பேசிய பொழுது தான் தெரியுது இதற்கு பின்னணியில் அறிவுகரசி சூழ்ச்சி இருக்கிறது என்று. ஆனாலும் நந்தினி இதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவார்.