Allu Arjun: புஷ்பா படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு கடந்த வாரம் புஷ்பா 2 வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்திருந்த அப்படம் தற்போது ஆயிரம் கோடியை வசூலித்து விட்டது.
இதை ரசிகர்களும் படகுழுவினரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் ஆரம்பமே ஒரு உயிரிழப்பில்தான் தொடங்கியது.
படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடந்த சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதில் சிக்கி ஒரு பெண் பலியானது பேரதிர்வை ஏற்படுத்தியது அதை அடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட பலர் மீது வழக்கு பாய்ந்தது.
அதே சமயம் அல்லு அர்ஜுன் முறையான பாதுகாப்பு இல்லாமல் வந்ததுதான் இதற்கு காரணம்.
அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கண்டனங்கள் எழுந்தது. அதை அடுத்து அவர் மீதும் வழக்கு பதிவு ஆனது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் செய்த வேலை
ஆனால் இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அல்லு அர்ஜுன் ஒரு வேலையை செய்திருக்கிறார். அதாவது தன் மீது பதிவாகி இருக்கும் இந்த கேசை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
இந்த தகவல் தற்போது கசிந்திருக்கும் நிலையில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. நீதியை கூட விலை கொடுத்து வாங்கும் நிலை தான் இப்போது என நெட்டிசன்கள் நொந்து போய் பதிவிட்டு வருகின்றனர்.