திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை போல் விஜய்யை காலி செய்வதற்கு விசுவாசிகள் செய்த வேலை.. தளபதி சூதானமா இருந்துக்கோங்க இல்லனா ஆபத்து

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதே போல் விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை எழுந்தது போல் விஜய்யும் அரசியல் என்ட்ரி கொடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது விஜய் நடிக்க வந்து 30 வருடங்கள் கடந்து விட்டது. அதை போற்றும் விதமாக அவருடைய ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக பல மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். அதில் சில ரசிகர்கள் விஜய்யை இம்ப்ரஸ் செய்வதாக நினைத்து சில வேண்டாத வேலையையும் செய்து இருக்கின்றனர்.

Also read: பாபா ரீ ரிலீஸில் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியா? பரபரப்பைக் கிளப்பி, உண்மை காரணத்தை உடைக்கும் பிரபலம்

அந்த வகையில் விஜய் விசுவாசிகளின் பேச்சை கேட்ட சில ரசிகர்கள் தேனி மாவட்டத்தில் ஒரு போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது அந்த போஸ்டரில் விஜய் போட்டோவை போட்டு நாளைய முதல்வரே என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இது ஒன்றும் தவறான செயல் கிடையாது. ஆனால் அவர்கள் விஜய்க்கு அடுத்தபடியாக அவருடைய விசுவாசிகளின் போட்டோவையும் போட்டுள்ளனர்.

அதில் நாளைய அமைச்சரே, நாளைய சட்டமன்ற உறுப்பினரே என்றெல்லாம் வாசகம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. இப்படித்தான் சில விசுவாசிகள் பல நடிகர்களை உசுப்பேற்றி ரணகளமாக்கி இருக்கின்றனர். அவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டாரை கூட ரசிகர்கள் இப்படித்தான் உசுப்பேத்தி விட்டார்கள். அவரும் மக்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றெல்லாம் கூறினார்.

Also read: 20 வருடங்களுக்குப் பிறகும் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்.. ரீ-ரிலீஸில் கல்லா கட்டாமல் விடமாட்டேன்

ஆனால் அவருடைய முடிவுக்கு எதிராக பல அரசியல் கட்சிகளும் மறைமுகமாக வேலை பார்த்தது. அதனாலேயே சூப்பர் ஸ்டார் அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் விஜய்க்கும் அது போன்ற நிலைமை வரக்கூடும் என்று சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தை விஜய் சொல்லி அவருடைய விசுவாசிகளும், ரசிகர்களும் செய்தால் கூட பரவாயில்லை.

ஆனால் அவர் கவனத்திற்கு வராமலேயே இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தான் பிரச்சனை என்று கூறுகின்றனர். இதை உடனே விஜய் கருத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் இதுவே அவருக்கு சில பின் விளைவுகளை கொடுக்கும் என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் தான் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது.

Also read: ரஜினியை தன் பாணியில் மிரட்டி பணிய வைத்த கேப்டன்.. பதறிப் போய் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்

Trending News