Actor Vadivelu: திரைக்கு முன் திரைக்குப் பின் என வடிவேலுவுக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது. அதேபோல் அவர் சமீப காலமாக பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
இதில் கேப்டன் மறைவுக்கு அவர் வராதது தான் பூதாகரமாக வெடித்தது. அதேபோல் தன்னை தூக்கி விட்டவர்களை கூட மதிக்காதவர் என இவர் மீது அனைவருக்கும் ஒரு வெறுப்பு இருக்கிறது.
இந்நிலையில் வடிவேலு கலைஞர் நூற்றாண்டு விழாவில் ராஜ்கிரணை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கண் கலங்கியபடி இருக்கிறார்.
வடிவேலுவின் அழுகை
இதை பார்த்தாலே நம்பும் படியாக இல்லை. ஏனென்றால் வடிவேலுவின் குணம் அப்படி. அதனாலேயே இதை ஏதோ அதிசய நிகழ்வாக எல்லோரும் பார்த்து வருகின்றனர்.
ராஜ்கிரணை பார்த்து கண் கலங்கிய வடிவேலு
![vadivelu-rajkiran](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/vadivelu-rajkiran.webp)
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் ராஜ்கிரண் தான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது. அப்படிப்பட்டவர் பண கஷ்டத்தில் இருந்தபோது வடிவேலு அவரை கண்டு கொள்ளவில்லை.
அவர் நினைத்திருந்தால் எந்த வழியிலாவது உதவி செய்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் கண்டுக்காமல் இப்போது அவருடைய நிலைமையே கொஞ்சம் மோசமாக இருக்கும்போது கண் கலங்கி இருக்கிறார்.
அதனாலேயே இதெல்லாம் நடிப்பாக தான் இருக்கும் என திரை உலகில் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனாலும் ராஜ்கிரண் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வடிவேலுவை தன் அருகில் உட்கார வைத்து பெரிய மனுஷன் என நிரூபித்து விட்டார்.