வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லியோ படத்தின் ஹைப்பை அதிகரிக்க செய்த வேலை.. நாலா பக்கமும் அடிபட்டு வரும் விக்ரம்

Leo and Dhuruv Nachathiram Movie: தற்போது திரையரங்குகள் அனைத்தும் திருவிழா மாதிரி ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகி உள்ள ஜெயிலர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு தான். அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் கொண்டாடும் விதமாக இப்படம் அவர்களுக்கு திருப்தி அளித்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இன்னும் கோலாகலமாக திரையரங்குகளை கொண்டாடுவதற்கு லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளிவர இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் வருகிற நான்கு மாதங்கள் தொடர்ந்து பல பெரிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.

Also read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

இந்த சூழ்நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி அதே நாளன்று கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திர படமும் வெளியாக போகிறது என்று செய்திகள் வந்திருந்தது. ஏற்கனவே இப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் அப்படியே போடப்பட்டிருந்தது. இந்நிலையில் லியோ படத்திற்கு போட்டியாக துருவ நட்சத்திரம் இறங்குகிறது என்ற நிலைமை இருந்தது.

ஆனாலும் அனைவரும் லியோ படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதற்கு காத்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி துருவ நட்சத்திரம் பண பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசுக்கு இன்னும் தயாராகவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.

Also read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

ஒருவேளை லியோ படத்துடன் போட்டி போட விரும்பாததால் துருவ நட்சத்திர படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்பது போல் தெரிகிறது. ஆக மொத்தத்தில் இப்போதைக்கு துருவ நட்சத்திரம் வெளிவர வாய்ப்பு இல்லை. ஏற்கனவே விக்ரமுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் கம்மியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இவர் நடிக்கிற படமும் பல சோதனைகளை எதிர்கொள்கிறது, ஆக மொத்தத்தில் லியோ படம் தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளை அலங்கரிக்க போகிறது. இதனால் அனைத்து ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வசூல் அளவில் லியோ படத்திற்கு போட்டியாக எந்த படங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெயிலரை விட லியோ தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. பொறாமையில் பேசிய 62 வயது சில்வர் ஜூப்ளி நடிகர்

Trending News