திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன பிறகு வேறொரு திருமணம் செய்து கொண்ட கோபியை மீண்டும் தன்னுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்காக இனியா பக்கா பிளான் போட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இப்போது கோபி வீட்டில் இருக்கும் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் அவ்வப்போது காரசாரமான விவாதம் எழுகிறது. இதனால் இனியா விபத்தில் சிக்கிக் கொண்டார் என்பதை தெரிந்ததும் பாக்யா பதறி அடித்துக் கொண்டு கோபி வீட்டிற்கு வந்து இனியாவை பார்க்க முயற்சிக்கிறார்.

Also  Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டிய புத்தம் புதிய சீரியல்

அப்போது கோபி அவரை காட்ட வில்லை. இதன் பிறகு பாக்யா கதறுவதை பார்க்க முடியாத தாத்தா இனியாவை சமாதானப்படுத்தி மறுபடியும் பாக்யா வீட்டிற்கு, மீண்டும்  இனியாவை அழைத்துச் செல்கிறார். இனியா வந்ததை பார்த்ததும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.

இதன்பிறகு இனியா மீண்டும் கோபி வீட்டிற்கு செல்ல மாட்டார் என அனைவரும் நினைக்கிறார்கள். அதற்கு மாறாக இனியா தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு மறுபடியும் கோபி வீட்டிற்கு தான் செல்வேன் என அடம் பிடிக்கிறார்.

Also  Read: பாக்யாவை கதற விடும் வாரிசு.. ராதிகாவிற்கு எதிராக நடக்கும் கூட்டு சதி

இனியாவின் மனதில், கோபி யை ராதிகாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்றால் அங்கு நாம் இருக்க வேண்டும் என வீட்டை விட்டு மறுபடியும் கிளம்புகிறார். இனியா யோசிப்பது போலவே கோபியும் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை எடுத்தெறிந்து பேச துவங்குகிறார்.

அதிலும் தற்போது எல்லை மீறி இனியா வீட்டை வீட்டு கிளம்பியதற்கு ராதிகா தான் காரணம் என அவருடன் சண்டைக்கு நிற்கிறார். இவ்வாறு இனியா நினைப்பது போல் விரைவில் கோபியை ராதிகாவிடம் இருந்து பிரித்து மீண்டும் தன்னுடைய அம்மா பாக்கியவுடன் சேர்த்து வைப்பார் வீட்டிற்கு அழைத்து வருவார். இப்படி சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை நாளுக்கு நாள் படுமோசமாக மாறிக் கொண்டிருக்கிறது.

Also  Read: குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட் எழுதிய பாரதி கண்ணம்மா சீரியல்.. டிஆர்பிக்காக இப்படி எல்லாமா பண்ணுவீங்க!

Trending News