வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உயிருக்கு போராடும் நேரத்திலும் நடந்த அந்தரங்க டார்ச்சர்.. சன் டிவி நடிகைக்கு நேர்ந்த மோசமான அனுபவம்

Sun Tv Actress: எல்லாத் துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் உடல் ரீதியான பல தொல்லைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சினிமா துறையில் இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். வளர்ந்து வரும் நடிகைகள் முதல் பிரபலமாக இருப்பவர்கள் வரை இது போன்ற பிரச்சினைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் சன் டிவியின் மூலம் பிரபலமடைந்த நடிகை சந்தியா தனக்கு நேர்ந்த மோசமான ஒரு அனுபவத்தை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்திருக்கும் இவர் 2006-ம் ஆண்டில் தனக்கு நடந்த அந்தரங்க தொல்லை குறித்து கூறியுள்ளார்.

Also read: நந்தினியால் குணசேகரனை கடித்து குதறிய கதிர்.. ஜீவானந்தத்தின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்

அதாவது ஒரு சீரியலின் டைட்டில் பாடல் காட்சியை கும்பகோணத்தில் படமாக்கி இருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட சந்தியாவுக்கு பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. என்னவென்றால் அங்கு இருந்த கோவில் யானை அவரை கீழே தள்ளி தாக்கி இருக்கிறது. இது குறித்து கூறிய சந்தியா யானை தாக்கியதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

வெறும் தும்பிக்கையால் தாக்கியதே எனக்கு மரண வலியை கொடுத்தது. அப்போது நான் சுய நினைவின்றி மயங்கி விட்டேன். உடனே அங்கு என்னுடன் ஆடிக்கொண்டிருந்த டான்ஸர்கள் அனைவரும் என்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். அதில் ஒரு டான்சர் மட்டும் என்னுடைய மார்பு பகுதியில் கை வைத்து தவறாக நடந்து கொண்டார்.

Also read: பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கோபி.. வாண்ட்டாக பாக்கியாவிடம் அசிங்கப்பட்ட ராதிகா

நான் மயக்க நிலையில் இருந்தபோதிலும் என்னால் அதை உணர முடிந்தது. ஆனாலும் தடுக்க முடியவில்லை. அந்த டான்ஸர் யார் என்று தெரியவில்லை என ரொம்பவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த விபத்தினால் சந்தியாவுக்கு சில ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருக்கிறது அது மட்டும் அல்லாமல் லிவர் உட்பட சில பாகங்களையும் அகற்றி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு பல போராட்டங்களை கடந்து அவர் மீண்டு வந்திருக்கிறார். தற்போது இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறி இருக்கும் அவர் என் அம்மாவிடம் கூட இந்த சம்பவத்தை நான் சொல்லவில்லை. உயிருக்கப் போராடும் நேரத்திலும் இப்படி ஒரு கசப்பான அனுபவம் எனக்கு நேர்ந்தது.

Also read: விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

என்னை தாக்கிய யானையின் மீது கூட எனக்கு கோபம் வரவில்லை. அந்த டான்சர் செய்த விஷயம் இன்னும் என்னால் மறக்க முடியாத சம்பவமாக இருக்கிறது என அவர் கண்ணீருடன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் சந்தியாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News