Gossip: அக்கட தேசத்தில் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள அந்த நடிகை தற்போது கோலிவுட் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளார். பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி பாலிவுட்டிலும் இவருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகையின் சம்பளமும் அதிகம் தான்.
பெரிய படிப்பு படித்திருந்தாலும் நடிப்பின் மீது உள்ள ஆசையால் நடிகை ஹீரோயின் ஆக மாறி இருக்கிறார். இந்நிலையில் இவர் பாலிவுட் இளம் ஹீரோ ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
கிரீன் சிக்னல் கொடுத்த தாய்குலம்
இருவரும் தற்போது இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்திற்கான ப்ரோமோஷன் ஆக இது இருக்குமோ என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்கிறது.
ஆனால் அந்த பெரிய இடத்து நடிகரின் அம்மா நாசுக்காக நடிகை போல் ஒருவர்தான் தனக்கு மருமகளாக வரவேண்டும் என ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார்.
இது போதாதா விஷயத்தை உறுதி செய்வதற்கு. அப்ப அவங்க டேட்டிங் விஷயம் உண்மைதான் போல இருக்கு.
நடிகை பெரிய இடத்தை பிடித்து விட்டார் சீக்கிரம் கல்யாணம் சேதி சொல்வாரா? என திரையுலகில் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.