இந்த ஊரடங்கு சமயத்தில் சில இளம் இயக்குனர்கள் பல முன்னணி நடிகர்களின் கவனம் ஈர்த்துள்ளனர். அதன் காரணமாக அந்த இளம் இயக்குனர்களிடம் சம்பந்தப்பட்ட முன்னணி நடிகர்கள் தங்களுக்காக ஒரு கதை எழுதும்படி கூறியுள்ளனர்.
அப்படி ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படம் பல கோடி லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது.
மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதையாக இருந்ததே இந்த படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேவரைட் படமாகவும் பெரிதும் அமைந்துள்ளது.
இதன் காரணமாக கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு நேரடியாக போன் செய்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தன்னைக் கவர்ந்து விட்டதாகவும் தனக்காக ஒரு கதை எழுதுமாறு கேட்டுக் கொண்ட ஆடியோ வெளியாகி வைரல் ஆனது.
அதை அப்படியே பிடித்துக் கொண்ட தேசிங்கு பெரியசாமி அடுத்த ஒரு வாரத்தில் ரஜினிக்கான கதையை எழுதி முடித்து விட்டாராம். ஆனால் இடையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் ரஜினியிடம் கதை சொல்ல முடியாமல் போய்விட்டதாம்.
தற்போது விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து கதை சொல்ல உள்ளாராம் தேசிங்கு பெரியசாமி. இந்த கதை மட்டும் பிடித்திருந்தால் தேசிங்கு பெரியசாமியின் சினிமா கேரியர் அடுத்த நிலைக்குச் சென்றுவிடும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.