வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மதுபோதையில் கீர்த்தி சுரேஷை அடித்த இளைஞர்.. ஜான்சி ராணியாக மாறிய சம்பவம்

Keerthi Suresh : கீர்த்தி சுரேஷ் இப்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் இப்போது கீர்த்தி சுரேஷ் களம் இறங்குகிறார். அதாவது அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் கூறிய அதிர்ச்சி தகவல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது சினிமாவில் வருவதற்கு முன் 2011 இல் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது தோழி இருவரும் நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது மது போதையில் ஒரு இளைஞன் கீர்த்தி சுரேஷை உரசி விட்டு சென்றிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தி சுரேஷ் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டு விட்டாராம். அதன் பிறகு சிறிது நேரத்தில் கீர்த்தி சுரேஷின் தலையில் அடிபட்டது போல் பயங்கரமாக சத்தம் கேட்டதாம். தனக்கு ஆக்சிடென்ட் தான் நடந்து விட்டதோ என்ற பயத்தில் கீர்த்தி சுரேஷ் இருந்தாராம்.

Also Read : ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷின் ஆடு புலி ஆட்டம்.. சைரன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

அதன் பிறகு தான் தெரிந்ததாம் அந்த குடிகார சுரேஷை தாக்கி இருக்கிறார். உடனடியாகவே அவரும் அவரது தோழியும் அந்த இளைஞனை விரட்டி பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனராம். அன்று முழுக்க அந்த இளைஞன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நிலையில் மறுநாள் தான் வெளியே வந்தாராம்.

அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து நடிக்கும் போது பலரும் இந்த விஷயம் தெரிந்து பயப்பட்டார்களாம். இவ்வாறு துணிச்சலாக தான் எதிர்கொண்ட விஷயத்தை சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள் நம்புற மாதிரியா இருக்கு என கீர்த்தி சுரேஷை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : ஒன்றிய அரசை மறைமுகமாக வெளுத்து வாங்கிய ரகு தாத்தா டீசர்.. கீர்த்தி சுரேஷ் ஆல் வெடிக்கும் புரட்சி

Trending News