வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் இளம் ஹீரோ.. விஜய், சிவகார்த்திகேயன் எல்லாம் பின்னாடி போங்கப்பா!

Super Star: சமீபகாலமாக சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நடிகருக்கும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. இதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் சிலர் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ள தான் செய்கிறார்கள்.

அவ்வாறு வாரிசு பட விழாவில் சரத்குமார் உட்பட சில பிரபலங்கள் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளி இருந்தனர். அதற்கு விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்காததே பேசு பொருளாக மாறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்தடுத்த நடிகர்களும் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள்.

Also Read : ரஜினிக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. சூப்பர் ஸ்டார் பரபரப்பாக பேசிய 5 மேடைகள்

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இளம் ஹீரோவும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இருக்கிறார். அதுதான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் தான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஜிவி பிரகாஷ் அடுத்ததாக லக் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதோடு மட்டுமல்லாமல் ரஜினி பட ஸ்டைலில் தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம்.

Also Read : 40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

அதாவது ராஜா சின்ன ரோஜா படத்தில் நிறைய குழந்தைகள் நடித்து இருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் அப்போதே கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் விலங்குகள் ஆகியவற்றையும் அதில் காட்டி இருப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

இந்த சூழலில் ராஜா சின்ன ரோஜா படத்தின் ஸ்டைலில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெறும் வகையில் ஜிவி பிரகாஷின் லக் சூப்பர் ஸ்டார் படம் உருவாக இருக்கிறது. விஜய் சிவகார்த்திகேயன் எல்லோரும் பின்னாடி போங்கப்பா நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஜிவி சொல்லும்படியாக இப்படத்தின் டைட்டில் அமைந்திருப்பது ரசிகர்களை சந்தேகத்திற்கு வழிவகுத்துள்ளது.

Also Read : அந்த ஒரு விஷயம் இல்லனா 100 வயசுக்கு மேலயும் நான் தான் சூப்பர் ஸ்டார்.. தனக்கு தானே சூனியம் வைத்த ரஜினி

Trending News