வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025

சீனியர் ஹீரோயின்கள் தான் டார்கெட்.. புலியை பார்த்து சூடு போடும் இளம் ஹீரோ

Gossip: தற்போது இளம் ஹீரோக்களின் ஆதிக்கம் திரையுலகில் நிறைந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வரும் ஹீரோக்களில் தொடங்கி இயக்குனர் to ஹீரோ என மாறிவிட்டனர்.

அப்படி தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஒரு ஹீரோ சீனியர் நடிகைகளுடன் நடிக்க ஆசைப்படுகிறாராம். அப்பொழுதுதான் முன்னணி அந்தஸ்தை விரைவில் பெற முடியுமாம்.

எல்லாம் அந்த டிவி ஹீரோவை பார்த்து வந்த ஆசை தான். ஆரம்பத்தில் அவர் சீனியர் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுவே அவருக்கு முன்னணி அந்தஸ்தை கொடுத்தது.

புலியை பார்த்து சூடு போடும் இளம் ஹீரோ

அதை சில வருடங்கள் ஃபாலோ செய்த அவர் இப்போது இளம் ஹீரோயின்கள் பக்கம் திரும்பி விட்டார். அதையே நாமும் பின்பற்றலாம் என அந்த இளம் ஹீரோ முடிவெடுத்துள்ளாராம்.

அதனாலேயே தற்போது அவர் சீனியர் ஹீரோயின்களுடன் நடிக்க கமிட்டாகி இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் அது இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்று தான் தெரியவில்லை.

புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை கதையாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அந்த இளம் ஹீரோ தற்போது களத்தில் குதித்துள்ளார்.

Trending News