வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோடிகளை வாரி கொடுத்தும் பத்தவில்லை.. அமரன் படத்திற்கு வைத்த கோரிக்கை

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் இரண்டு வாரங்களை கடந்தும் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்திருந்தார். மேலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட்டது.

இந்த சூழலில் படம் வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட 42 கோடி வசூலை பெற்று தந்தது. தொடர்ந்து படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கோடிகளை வாரிக் குவித்து வருகிறது. அதன்படி இப்போது 250 கோடியை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கமல் தற்போது அமரன் படத்திற்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். பொதுவாகப் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடிக்கு விற்கப்படுகிறது. படம் வெளியான ஒரு மாதத்திற்கு பின் ஓடிடியில் ஒளிபரப்பு செய்கின்றனர்.

அமரன் படத்திற்கு தியேட்டர் உரிமையாளர் வைத்த கோரிக்கை

அவ்வாறு அமரன் படமும் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அதாவது அமரன் படம் வெளியான 8 வாரங்கள் கழித்தே தியேட்டரில் வெளியிட வேண்டும். இப்போதும் தியேட்டரில் நல்ல வசூலை பெற்று வருவதால் இன்னும் சற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

அதோடு இப்போது கங்குவா படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அமரன் படத்தால் இந்த படத்திற்கும் சில திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை ஏற்று அமரன் ஓடிடி ரிலீஸ் தள்ளி போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News