சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

24 ஆம் தேதியை குறிவைக்கும் திரையரங்குகள்.. தல, தளபதி படத்தை தாண்டி வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

சினிமாவை எப்போதும் திரையரங்கில் தான் ஒளிபரப்பப்படும் அதற்கு காரணம் ரசிகர்கள் பலரும் படங்களை திரையரங்கில் பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை தவிர வேறு எதையும் திரையரங்கில் ஒளிபரப்ப முன்வர மாட்டார்கள்.

அப்படி இருக்கும்போது தற்போது திரையரங்கில் படங்களை தாண்டி பல கருத்துக்கள் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பெருவாரியான ரசிகர்கள் எதிர்பார்ப்பது படங்களை மட்டும் தான். சமீபகாலமாக திரையரங்குகள் பெரிய அளவில் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தான் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது வருகிற 24-ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்ப உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தியாவில் பல மந்திரிகளும் பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு நல்வரவு இல்லை அதனால் கிரிக்கெட்டை நடத்தக்கூடாது எனக் கூறி வந்தனர்.

ஆனால் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி யார் எதிர்த்தாலும் நினைத்தபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் கண்டிப்பாக நடைபெறும் என தெரிவித்தார். தற்போது 24 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விளையாட்டை நேரடியாக திரையரங்கில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக பிவிஆர், பிரத்தனா போன்ற பிரம்மாண்டமான திரையரங்குகளில் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

T20-world-cup
T20-world-cup

தற்போது இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனால் இந்தியா மேல் பற்றுள்ள காரணமாக விளையாட்டை பார்ப்பதற்கு பல ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். அதனால் வருகிற 24-ஆம் தேதி அன்று அனைத்து திரையரங்கிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News