வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குட் பை சொல்லும் விஜய், தத்தளிக்கும் விடாமுயற்சி.. கல்லா கட்ட திசை திரும்பும் தியேட்டர்கள்

Vijay-Ajith: பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதை அவர் வெளிப்படையாகவே அறிவித்த நிலையில் அவருடைய இடத்திற்கு தான் தற்போது கடும் போட்டி நடந்து வருகிறது. அதே போல் அஜித்தின் விடாமுயற்சி இன்னும் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இப்படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் இன்னும் முடிவு பெறாமல் இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் அவருடைய ரசிகர்கள் லைக்காவை காணும் என அறிவிப்பு கொடுக்கும் வரை வந்து விட்டார்கள். இப்படி பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களால் தியேட்டர்களின் நிலை தான் பெரும்பாடாக இருக்கிறது. ஏனென்றால் டாப் ஹீரோக்களின் படங்களை பார்க்க தான் திரையரங்குகளில் கூட்டம் குவியும்.

Also read: விஜய்யின் கடைசி இரண்டு படங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சம்பளம்.. விடாக்கண்டன் போல் அஜித் முழிக்கும் முழி

அதில் விஜய், அஜித்திற்கென்று தனி மாஸ் இருக்கிறது. அதனாலயே தற்போது இவர்களுடைய படங்களை ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்கள் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பாபா, வேட்டையாடு விளையாடு என பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் வாலியும் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.

மேலும் சிட்டிசன், கில்லி, ஷாஜகான், பில்லா என அடுத்தடுத்த படங்களும் வரிசை கட்ட இருக்கிறது. இப்படி பழைய படங்களை வைத்து திரையரங்குகள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் தியேட்டர்கள் கே டிவியாக மாறிவிட்டது என நெட்டிசன்களின் அளப்பறையையும் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கோலிவுட்டின் நிலை தற்போது உள்ளது.

Also read: அரசியலில் முதல் தகுதியிலேயே அவுட் ஆன விஜய்.. சூழ்ச்சி தெரியாமல் சிக்கும் தளபதி

Trending News