வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பெரும் வயிற்றெரிச்சலில் திரையரங்குகள்.. ஏற்கனவே கல்லாவை நிரப்பியாச்சு, சன் பிக்சர்ஸ் டீலில் விட்ட பரிதாபம்!

Sun Pictures: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி தற்போது வரை வசூல் வேட்டை ஆடி கொண்டிருக்கிறது இதுவரை உலகம் முழுவதும் சுமார் 550 கோடி வசூலை ஜெயிலர் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு BMW X7 காரை அவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு Porsche பிராண்ட் காரையும் பரிசளித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

Also Read: ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

இருப்பினும் கலாநிதி மாறன் செய்த செயலால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி 20 நாட்களைக் கடந்தும் இன்னும் தியேட்டரில் ஹவுஸ்புல் தான் போய்க்கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் தியேட்டர்கள் இரண்டு ஷோகளாவது ஹவுஸ்புல் ஆகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியிட்டு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ இந்த படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கி விட்டது. செப்டம்பர் 7 ஓடிடி-யில் இது ரிலீசாக இருக்கிறது. இதை ஏற்கனவே பெருந்தொகைக்கு அமேசான் இடம் விற்று விட்டார்கள்.

Also Read: அடுத்த லிஸ்டில் ரெடியான சொகுசு கார்.. ரஜினி, சன் டிவியிடம் சிபாரிசு செய்த அந்த இரண்டு நபர்கள்

ஜெயிலர் இப்பொழுது தியேட்டர்களில் நல்ல கலெக்சன் ஆகிறது. ஓடிடியில் ரிலீஸ் ஆனால் கல்லா கட்ட முடியாது என்று யோசித்து வருகின்றனர். ஆனால் கலாநிதி மாறனை பொருத்தவரை அவர் எதிர்பார்த்த லாபம் பார்த்து கல்லாக் கட்டி விட்டாச்சு, இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, ஜெயிலர் படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதில் தான் மும்முரம் காட்டுகிறார்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்களை பொறுத்தவரை ரஜினி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்கள் தான் ஒரு மாதத்தை கடந்து தியேட்டரில் ஓடுகிறது. அந்த சமயத்தில் தான் பணம் பார்க்க முடியும். அதற்கும் இப்படி உலை வைக்கிறார்களே என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கின்றனர்.

Also Read: ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

Trending News