வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு, துணிவு படங்களை ரத்து செய்த தியேட்டர்கள்.. அஜித்,விஜய்யை யோசிக்க வைத்த சம்பவம்

கடந்த பதினொன்றாம் தேதி மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்கள் தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் துணிவு திரைப்படம் முதல் நாளிலேயே பலரையும் ஆச்சரியத்தில் மிரட்டியது. ஆனால் வாரிசு படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இப்போது படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்த இரு படங்களின் காட்சிகளை சில தியேட்டர்கள் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் இந்தப் படங்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் சில ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். இப்படி இந்த இரண்டு படங்களின் ஆரவாரம் தான் இப்பொழுது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: துணிவு வெற்றியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்.. அப்பாவி நடிகரை டீலில் விட்ட வினோத்

இது ஒரு புறம் இருந்தாலும் சில கிராமப்புறங்களில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சியை பார்க்க கூட்டமே வரவில்லையாம். அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் துணிவு திரைப்படத்தின் ஒரு மணி மற்றும் நான்கு மணி காட்சிக்கு ஹவுஸ்புல்லாக கூட்டம் வந்திருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த காட்சிக்கு 10 பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ந்து போன தியேட்டர் நிர்வாகம் அந்தக் காட்சியை ரத்து செய்திருக்கிறது. மேலும் டிக்கெட் வாங்கிய 10 பேரையும் அதற்கு அடுத்த காட்சிக்கு வர சொல்லி இருக்கின்றனர். இவ்வாறு துணிவு படத்திற்கு தான் இந்த நிலைமை என்று பார்த்தால் வாரிசு படத்திற்கும் அதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கிறது.

Also read: அஜித் சாரை பார்த்து கத்துக்கோங்க.. மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு நடிகர்

அதாவது ஈரோடு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் நள்ளிரவு காட்சி மட்டுமே அரங்கம் நிறைந்து ஓடி இருக்கிறது. அதற்கு அடுத்த காட்சியை பார்ப்பதற்கு ஆள் வரவில்லையாம். இதனால் அந்த காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இந்த இரண்டு படங்களும் தற்போது தமிழ்நாடு முழுவதுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும்போது இந்த இரு கிராமங்களில் அதற்கான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்த படங்களுக்கு தற்போது அனைத்து இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அதனால் அடுத்ததாக வரும் பண்டிகை விடுமுறையில் ரசிகர்களின் கூட்டத்தால் தியேட்டர்கள் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஆட்டநாயகனாக முன்னேறிய விஜய் எங்க தெரியுமா? துணிவு, வாரிசு 2 நாள் கலெக்சன் இதுதான்!

Trending News