செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதல் காட்சியிலேயே பல கோடிகள் ஆட்டையை போடும் திரையரங்குகள்.. வாரிசு, துணிவால் அழியும் கலாச்சாரம்

பொதுவாக பெரிய நாடுகளின் படங்கள் தியேட்டரில் வெளியானால் டிக்கெட் விலை அதிகம் விற்பதை பார்க்க முடிகிறது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் பல திரை நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு குறைந்த அளவு தான் டிக்கெட் விலை நிர்ணயிக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கேட்டுக்கொண்டார்.

இப்படி இருக்கையில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகிறது. இந்த படத்திற்காக இருதரப்பு ரசிகர்களுமே ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆகையால் ஜனவரி 11ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Also Read : வாரிசு பட கோவை சரளாவுக்கு இத்தனை கோடியா.. நயன்தாராவை ஓவர்டேக் செஞ்சிட்டாங்க போல

அதேபோல் துணிவு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மும்மரமாக நடந்து வருகிறது. ஏனென்றால் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களின் டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்களுக்கே தலை சுற்றுகிறது.

அதாவது வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து 3000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு மூணு மணி நேர படத்திற்கு இவ்வளவு தொகையாய் என அனைவரும் வாயை பிழைக்கின்றனர். திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலை 192 ரூபாய் மட்டுமே.

Also Read : வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

ஆனால் இது போன்ற டாப் நடிகர்களின் படங்களை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள். மேலும் முதல் காட்சியிலேயே 15 கோடி வரை லாபத்தை இந்த படங்களின் மூலம் திரையரங்குகள் பெறுவதாக கூறப்படுகிறது.

அப்படியே இது தொடர்ந்து வந்தால் வரும் காலங்களில் சாதாரணமாகவே டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலை இப்படியே தொடரக்கூடாது என்றால் பெரிய நடிகர்கள் தான் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

Also Read : வாரிசு படம் அந்த ஹீரோக்களுக்கு போட்டியாக இருக்காது.. உண்மையை உளறிய தில் ராஜு

Trending News