கொரோனா என்னும் பெரும் தொற்றாள் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அனைவரும் ஒருவித அச்சத்துடனும் எச்சரிக்கையுடன் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது.
மேலும் இந்த கொரோனா பலருடைய வாழ்க்கை புரட்டிப் போட்டுவிட்டது. பல தொழில்கள் முடங்கி விட்டன. அந்தவகையில் சினிமா சார்ந்த தொழில்களான திரையரங்குகளும் மூடப்பட்டன. கொரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டது. இருப்பினும் அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி திரையரங்குகள் திரும்பவும் மூடப்பட்டன.
தற்போது தமிழக அரசு அனுமதியின் பெயரில் நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இறக்கைகளுடன் திறக்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பல செய்திகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் 1,100 திரையரங்குகள் உள்ளன நிலையில் தமிழக அரசு வழங்கிய விதிமுறைகளின்படி 50% இருக்கைகள் உடனும் ,திரையரங்குகளில் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியும் ,மேலும் திரையரங்கம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி அளிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதை உறுதிப்படுத்தும் விதமாக “நான் தடுப்பூசி செலுத்திவிட்டேன்” என்ற வாசகம் அடங்கிய கேசட்டுகளை அணிந்திருப்பார்கள் ,முக்கியமான இடங்களில் கிருமிநாசினி வைக்கப்படும், பார்வையாளர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்படும் மேலும் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும் ,முதலில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உடனடியாக திறக்கப்படும் ,மற்ற தியேட்டர்கள் மேலும் சில நாட்கள் கழித்து திறக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது ரசிகர்களுக்காக அரண்மனை 3, சிவகுமார் சபதம் ,லாபம், பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் ,ஆங்கிலத்தில் காஞ்சூரிங் 3, இந்தியில் பெல்பாட்டம் போன்ற திரைப்படங்களும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இன்றி பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.