வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக்செல்வன்.

ஏனென்றால் இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று மாறுபட்டே இருந்தது.

தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரிக்க, அணி சசி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பலருக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது அசோக்செல்வன், நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பதுதான் இந்த தீனி. இந்தப் படம் நேரடியாக  ஜி ப்ராக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் அசோக்செல்வன் சமையல் கலைஞராக நடித்துள்ளதோடு, சற்று உடல் பருமனானவராகவும், ஏதோ ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதனால் அசோக்செல்வன் வித்யாசமான கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

Trending News