ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தேங்காய் சீனிவாசனிடம் அடிவாங்கிய பாக்கியராஜ்.. கடைசிவரை வாய்ப்பு தர மறுப்பு

தேங்காய் சீனிவாசன் 1970 முதல் 1980 வரை மிகவும் பிரபலமான நடிகர். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்துள்ளார். கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார். அதனால் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தேங்காய் சீனிவாசன் அவரது தந்தையை போல நடிகனாக வேண்டும் பல முயற்சிகளை எடுத்தார். அப்பொழுது அவர் தந்தை இயக்கிய கலாட்டா கல்யாணம் என்ற மேடை நாடகத்தில் அறிமுகமாகி நடித்தார்.

தமிழ் திரை உலகில் ஒருவிரல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தேங்காய் சீனிவாசன் சுமார் 900 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜிகணேசனை வைத்து கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

இவர் ரஜினியுடன் நடித்த தில்லுமுல்லு மற்றும் முத்துராமன் உடன் காசேதான் கடவுளப்பா திரைப்படங்களும் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. தேங்காய் சீனிவாசன் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்த பொழுது முதல் முதலில் கிளாப் அடித்து உடன் சூட்டிங் தொடங்கும்படி பாக்யராஜ் இடம் கூறியுள்ளனர்.

அதன்படி இயக்குனர் பாக்யராஜ் கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். அப்பொழுது தெரியாமல் தேங்காய் சீனிவாசன் மூக்கில் லைட்டாக பட்டுவிட்டது. உடனே கோபத்தில் பாக்கியராஜ் கன்னத்தில் அறைந்து விட்டார் தேங்காய் சீனிவாசன். அன்று முழுவதும் அழுது தீர்த்து விட்டாராம் இயக்குனர் பாக்கியராஜ்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ். தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் பாக்யராஜ். அதன்பின்பு பாக்கியராஜ் இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாட்கள், தாவணிக் கனவுகள், முந்தானை முடிச்சு என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் பாக்யராஜ் இயக்கிய ஒரு படத்தில் கூட தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாக்யராஜுக்கு நடந்த பழைய கசப்பான அனுபவத்தால் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு தர மறுத்து விட்டாராம்.

இதற்கு அடுத்தபடியாக தனது மகனையும் சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பதற்காக தற்போது முருங்கை சீசன் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெற்றியை வைத்து சாந்தனுவும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதுதெரியும்

Trending News