வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கள்ளிப்பால் தேனி குஞ்சாரம்மா நடிப்பில் வெளியான 5 ஹிட் படங்கள்.. இதெல்லாம் மிஸ் பண்ணவே கூடாது

வேதம் புதிது என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் தேனி குஞ்சாரம்மா. அதன் பிறகு பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து நன்கு பிரபலமடைந்தார்.

மருதுபாண்டி: ராம்கி மற்றும் சீதா நடிப்பில் வெளியான மருது பாண்டி திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம். இப்படத்தின் மூலம் ராம்கியின் திரைவாழ்க்கை மாறியது என்று கூட கூறலாம். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தேனி குஞ்சாரம்மா நடித்திருப்பார். இவர் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

தாஜ்மஹால்: பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தாஜ்மஹால். இப்படத்தில் மனோஜ்விற்க்கு ஜோடியாக ரியா சென் நடித்திருப்பார்.படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் தேனி குஞ்சாரம்மா நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்தின் இடம்பெற்ற சொட்டச் சொட்ட தாஜ்மஹால், ஈச்சி எலுமிச்சி மற்றும் திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வரான் வரான் போன்ற பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன. ஏ ஆர் ரகுமானின் இசையும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறலாம்.

பட்ஜெட் பத்மநாதன்: பிரபு மற்றும் ரம்யா கிருஷ்ணா நடிப்பில் வெளியான பட்ஜெட் பத்மநாதன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக பிரபு வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொரு விஷயத்திற்காக பட்ஜெட் போட்டு செலவு செய்வார். இந்த காட்சிகள் தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் தேனி குஞ்சாரம்மா  நடித்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றார்.

விருமாண்டி: கமல்ஹாசன் நடிப்பில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமாண்டி இப்படம் அன்றைய காலகட்டத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. கிராமம் கலந்த கதை என்பதால் இப்படத்தில் தேனி குஞ்சாரம்மாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கமல்ஹாசன் கொடுத்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

காதல் சடுகுடு: விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு படத்தில் தேனி குஞ்சாரம்மா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் படத்தில் விவேக் உடன் தேனி குஞ்சாரம்மா குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பது போல காட்சி அமைத்து ரசிகர்களிடம் தேனி குஞ்சாரம்மாவிற்கு பாராட்டை வாங்கி கொடுத்தனர். முன் ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தாலே இப்படி தான் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.

பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த தேனி குஞ்சாரம்மா ஏ ஆர் ரகுமான் இசையில் பேட்ட ராப், கும்மியடி மற்றும் கொக்கு சேவ கொக்கு போன்ற பல பாடல்கள் பாடியுள்ளார்.

Trending News