Good Bad Ugly: இப்போது சோசியல் மீடியா முழுவதும் அஜித் புராணமாக தான் இருக்கிறது. ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி வரும் 10ம் தேதி உலக அளவில் வெளியாகிறது.
அதற்கு முன்பே அஜித் ரசிகர்கள் இணையதள அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் கட்டவுட், பேனர் வைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
அதேபோல் இப்போதே ட்விட்டர் தளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து படம் சூப்பர் டூப்பர் ஹிட் என தெறிக்க விடுகின்றனர் அஜித் பேன்ஸ். மற்றொரு பக்கம் புதுப்புது அப்டேட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.
குட் பேட் அக்லியில் இருக்கும் 2 ஸ்பெஷல் சாங்
படத்தின் ஓவர் சீஸ் பதிப்பை பார்த்த சென்சார் அதிகாரிகள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். அதேபோல் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் படத்தின் ரன்னிங் டைம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
இந்நிலையில் படத்தில் இருக்கும் இரண்டு ஸ்பெஷல் பாடல்கள் பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ட்ரைலரில் ஒத்த ரூபா தாரேன் பாடல் இடம் பெற்றிருந்தது.
அந்தப் பாடல் அஜித்தின் சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே ஆதிக் மார்க் ஆண்டனி படத்தில் இதே போல் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலை பயன்படுத்தி இருந்தார்.
அதேபோல் குட் பேட் அக்லியில் இன்னொரு விண்டேஜ் பாடலும் இருக்கிறது. சிம்ரனின் கலக்கல் ஆட்டத்தில் வெளிவந்த தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடல் இப்போதும் கூட ரசிகர்களின் பேவரைட்.
அப்பாடலை தான் ஆதிக் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் இது அஜித்துக்கு கிடையாது. அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர் இருவரும் இணைந்து ஆடும் ரொமான்டிக் பாடல் என்ற செய்தி கசிந்துள்ளது.
படம் வெளியானால் நிச்சயம் இதுதான் இன்ஸ்டா ரீல்ஸாக கலைக்கட்டும். அந்த அளவுக்கு பழைய பாடல்களுக்கு தான் இப்போது மவுசு இருக்கிறது. ஆக தியேட்டர் ஸ்கிரீன் கிழிய போகுது.