சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பார்சலில் வந்த வெடிகுண்டு.. முடிசூடா மன்னன் இளையராஜா மேல் விழுந்த தீராப்பழி

Ilayaraja: 80 காலகட்டத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய இளையராஜா மேல் இன்று வரை ஒரு தீராப்பழி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இளையராஜா தான் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து வந்தார்.

இவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் ஹீரோக்கள் காத்திருக்கும் நிலையும் அப்போது இருந்தது. அதனாலேயே மற்ற இசையமைப்பாளர்களால் இளையராஜாவை எதிர்த்து ஜெயிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தங்களுக்கு என ஒரு அடையாளத்தை பிடித்தவர்கள் தான் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்.

இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து சேர்ந்து பயணித்த இருவரும் ஒரு கட்டத்தில் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினர். அதில் சங்கர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து கணேஷ் இசையமைப்பாளராக புகழ்பெற தொடங்கினார்.

Also read: அபசகுனங்களை முன்பே கணித்த இளையராஜா.. கார்த்திகை தீப திருநாளில் சூழ்ந்த இருள்

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. 1986 காலகட்டத்தில் கணேஷ் வீட்டிற்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதை பிரித்ததுமே பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கிறது. அதில் கணேஷின் கால் மட்டுமே மூன்று துண்டாக சிதறி இருக்கிறது. அதேபோல் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவரை எம்.ஜி.ஆர் தான் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்கள் போராடி காப்பாற்றி இருக்கிறார். கால்களை எடுக்க வேண்டும் என்று சொன்ன மருத்துவர்களும் அதை ஒரு சவாலாக ஏற்று அவருக்கு சிகிச்சை கொடுத்த கால்களை சேர்த்து இருக்கின்றனர்.

ஆனால் கையில் சில பாதிப்புகள் இருப்பதால் எப்போதும் அவர் கையுறையோடு தான் இருப்பார். இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த வெடிகுண்டு விபத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இளையராஜா மேல்தான் பழி விழுந்தது.

Also read: கடைசி நேரத்தில் பவதாரணி சந்தித்த சோதனைகள்.. பாசத்தால் பதறிப் போன இளையராஜா

தனக்கு போட்டியாக கணேஷ் வளர்வதை விரும்பாத அவர்தான் இப்படி ஒரு பார்சலை அனுப்பினார் என்றும் அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது சின்னத்திரையில் ஹீரோவாக கலக்கி வரும் ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் கணேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News