ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மரண அடி வாங்க போகும் விஜய்.. அடுத்த முதல்வர் என சுற்றித்திரிந்தவரை மறந்த இளையதளபதி

விஜய் ஒரு காலகட்டத்தில் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். அதை இப்போது இரண்டாக மாற்றிக் கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்சமயம் விஜய்க்கு ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டு படங்கள் என்றால் வருடத்திற்கு 400 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஆனால் இப்போது மொத்தமாக சினிமாவை விட்டு அரசியலுக்கு வர இருக்கிறார்.

Also Read : நிஜத்திலும் நடிக்கப் போகும் விஜய்.. 400 கோடிகளை தூக்கி எறிவதற்கு பின்னால் உள்ள ராஜதந்திரம்

இது விஜய் போடும் தப்பு கணக்கு என்று பலர் கூறுகின்றனர். ஏனென்றால் 400 கோடியை விட்டுவிட்டு முழுவதுமாக அரசியலில் இறங்குவது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமின்றி இதேபோல் பிரபல நடிகர் ஒருவர் அரசியலில் இறங்கி காணாமல் போன சம்பவமும் இருக்கிறது.

முதலாவதாக விஜயகாந்த் இவ்வாறு அரசியலில் இறங்கி தோற்றுப் போனார். அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். அவரின் மனதில் அழுத்தமாக அடுத்த முதல்வர் நான் தான் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அரசியல் என்பது வேறு என்பதை நாளடைவில் கமல் புரிந்து கொண்டார்.

Also Read : நன்றி மறந்து தூக்கி எறிந்த விஜய்.. உதவி கேட்ட விஜயகாந்துக்கு எள்ளளவும் மனம் இறங்காத இளைய தளபதி

இதனால் சினிமா தான் நமக்கு செட் ஆகும் என மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி விக்ரம் படம் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதற்கு அடுத்தபடியாக தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இதன் மூலமும் அவரால் நிறைய கல்லாகட்ட முடிகிறது.

இவ்வாறு அரசியலில் வெறுத்துப் போன நடிகர்கள் உள்ள நிலையில் விஜய் துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார். இது நிச்சயமாக அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகிறார்கள். இதில் விஜய்யின் வியூகம் அவருக்கு மட்டுமே தெரியும். ஆகையால் அவர் எப்படி அரசியலை கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : லிப் லாக் காட்சியில் நடித்த 5 நடிகர்கள்.. விஜய்யை கிஸ் அடிக்க வைத்த எஸ்ஜே சூர்யா

Trending News