புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஸ்மோக்கிங் ரூமில் ஒரே லிப் லாக் சத்தமா இருக்கு ஆண்டவரே.. என்னடா இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா?

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டாக வந்ததிலிருந்தே சுவாரஸ்யம் கூடி வருகிறது. காலேஜில் சீனியர் ஜூனியரை ராகிங் செய்வது போல் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் புது புது ப்ளானாக போட்டு மொத்த வில்லத்தனத்தையும் காட்டி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தாலும், என்ன நடந்தால் எனக்கென்ன என்பது போல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஜோடியும் வீட்டுக்குள் இருக்கிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த ஐஷு, நிக்சனை தன்னுடைய வலையில் விழ வைத்ததிலிருந்தே சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அதிலும் சும்மா இருக்கிறவரை உசுப்பேத்தி விட்ட கதையாக வேண்டுமென்றே அவர் டபுள் கேம் ஆடுவது படு கேவலமாக இருக்கிறது. அதனாலேயே அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்த வேண்டும் என்று ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த ஜோடி திருந்தாமல் இப்போது ஸ்மோக்கிங் ரூமில் ஒரு வேலையை பார்த்து வைத்திருக்கிறது.

Also read: நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்.. புது திட்டம் போட்டு பகல் கனவு காணும் பிக்பாஸ் விஷ பாட்டில்கள்

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அந்த ரூமில் நிக்சன், ஐஷு இருவரும் தனியாக ஒதுங்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த ரூமில் கேமரா கிடையாது என்பதால் அவர்கள் பேசும் சத்தம் மட்டும் வெளியில் கேட்கிறது. இடையில் அவ்வப்போது வேறு ஒரு சத்தமும் கேட்கிறது. அதை பார்த்த ஆடியன்ஸ் என்னடா நடக்குது இங்க, லிப் லாக் சத்தம் எல்லாம் கேட்கிறதே என கேட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டர் சவுண்ட் தான் அது. இருப்பினும் அவர்கள் பேசிக்கொள்வதை பார்க்கும் போது ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது. அதை தொடர்ந்து ஐஷு என்ன சோகம் தம்பி என்று நிக்சனை வம்புக்கு இழுப்பது போல் நக்கலாக பேசுகிறார். இதுதான் பார்ப்பவர்களை கடுப்பேற்றி இருக்கிறது. ஏனென்றால் நிக்சனின் இந்த பரிதாப நிலைக்கு காரணமே அவர்தான்.

அப்படி இருக்கும் போது ஒன்றும் தெரியாத பிள்ளை போல் அவர் நடந்து கொள்வது சிறு எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படியாக ஸ்மோக்கிங் ரூமில் பேசிக்கொண்டிருக்கும் இருவரில் நிக்சன் முதலில் யாரும் பார்ப்பதற்கு முன்பு வெளியேறுகிறார். அதை தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து ஐஷு வருகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது பிக்பாஸ் வீடா அல்லது வேறு ஏதாவதா என்று தான் கேட்க தோன்றுகிறது.

Also read: ஆண்டவரே இதுக்கு ஒரு எண்டு இல்லையா.. எல்லை மீறும் போட்டியாளர்கள், முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்

Trending News